Thursday, September 25, 2014

மகாராஷ்டிரா என்ன காய் கறியா? கூறு போட..


மகாராஷ்ட்ராவில் சட்டசபை தேர்தல், என்றதுமே ...

அடே டே, நம்ம சிவா சேனா ஆட்கள் தொலை தாங்க முடியாதே என்று ஒரு நினைவுதான் வரும். இவர்கள் பேச்சு எல்லாம் மிகவும் எரிச்சல் ஊட்ட கூடியதாக இருக்கும். காங்கிரஸ் கட்சியை ஒரு குடும்ப அரசியல் கட்சி என்று என்று சத்தம் போட்டு பேசும் இவர்கள் (காங்கிரஸ் கட்சி ஒரு குடும்ப அரசியல் தான் நடத்துகின்றது, அதை யாராலும் மறுக்க இயலாது. அதனால் தானே மக்கள் சாட்டையடி கொடுத்து அவர்களை அசிங்க படுத்தினார்கள்) கட்சி திருவாளர் பால் தாகேரி தலைமையில் இருந்து அவர் மகனிடம் சென்றது. தற்போது பெரியவரின் பேரன் ஆதித்யா தாகேரி இந்த கட்சியின் தலைமைக்கு வருவதற்கான காரியங்கள் தடபுடல் என்று நடைபெற்று கொண்டு இருகின்றது.

இந்த தேர்தலில் பல பேச்சு வார்த்தைகளின் இறுதியில் பிஜேபி -சிவா சேனாவின் உறவு முடிந்தது. 25 வருடமாக இருந்து வந்த இந்த உறவு முடிந்தது ஒரு விதத்தில் நல்லதே. இந்த தேர்தலில் மட்டும், பிஜேபி முழுமையாக வெற்றி பெற்று சிவா சேனாவை வீட்டிற்கு அனுப்பி வைத்தால், அது மகாராஷ்டிராவிற்கு கிடைத்த வரபிரசாதம் போல்.


பிரதமர் மோடியும்- அமித் ஷாவும், எதை ஒழுங்காக செய்கின்றார்களோ இல்லையோ, இந்த மற்றவர்களை ஓரங்கட்டுவதில் வல்லவர்கள் தான். முதலில் அத்வானி மற்றும் சில தலைவர்கள், இப்போது சிவ சேனா. இவர்கள் செய்த காரியத்திலேயே இந்த சிவ சேனாவை தள்ளி வைத்தது தான் எனக்கு மிகவும் பிடித்தது.

இந்த நேரத்தில், ஒட்டு பிரிந்து மீண்டும் காங்கிரஸ் அங்கே ஆட்சி அமைக்க வாய்ப்பு வந்து உள்ளது என்று ஒரு சிலர் பேசி கோவது கேட்கின்றது. இங்கே, இன்னொருவரும் இருக்கின்றார், அவர் பெயர் தான் சரத் பாவர். இவர் காங்க்ராசை விட்டு பிரிந்து இந்த NCP கட்சி துவங்க காரணமே "காங்க்ராஸ்  குடும்ப அரசியல்" தான்.  (காங்கிரஸ் கட்சி ஒரு குடும்ப அரசியல் தான் நடத்துகின்றது, அதை யாராலும் மறுக்க இயலாது. அதனால் தானே மக்கள் சாட்டையடி கொடுத்து அவர்களை அசிங்க படுத்தினார்கள்) ஆனால் இந்த கட்சியில் இவர் மகள் சுப்ரியா தான் தலைமையில் உள்ளார். இவர்கள் எல்லாரும் பொது மக்களை முட்டாள்கள் என்று முடிவு பண்ணி விட்டார்கள்.


சரி, இப்போது காங்கிரசிற்கு  வருவோம். மற்ற மாநிலங்களை விட மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ் கட்சிக்கு கொஞ்சம் ஒட்டு வங்கி அதிகமாக உள்ளது என்பது உண்மை. இந்த பிஜேபி - சிவ சேனா உறவு முறிவினால் இவர்கள் மிகவும் தெம்பு அடைந்து இருப்பார்கள் என்பதும்  உண்மையே.

போகின்ற போக்கை பார்த்தால், மகாராஷ்டிர தேர்தல் முடிந்த பிறகு நிறைய "குதிரை வியாபாரம்" இருக்கும் என்று தான் நினைக்கின்றேன்.


கடைசியாக ஒரு விஷயம்! "மோடி - ஷா" கூட்டணி உமா பாரதியை கட்சியில் இருந்து வெளியேற்றும் நேரம் நெருங்கி விட்டது. உமா பாரதி அவர்கள் வெளியே மோடி அவர்களை பற்றி எதுவும் பேசாவிட்டாலும்,மோடியை சில வருடங்களுக்கு முன் கண்டபடி தாக்கி பேசியதை யார் மறந்தாலும் மோடி மறக்க மாட்டார்.
 சென்ற வாரம் பிரதமர் மோடி அவர்கள் சில மத்திய அமைச்சர்கள் சரியா பணி புரிவது இல்லை என்று அவர்களை கடிந்து கொண்டார் என்று எங்கேயோ படித்த நினைவு. இந்த கண்டிக்க பட்ட அமைச்சர்களில் உமா பாரதியும் ஒருவர். உமா பாரதிக்கு பொறுமை என்பது எள்ளளவும் கிடையாது.

ஸ்டார்ட்..அக்ட்சன்.... 


www.visuawesome.com
 

1 comment:

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...