Friday, September 19, 2014

உள்ளதும் போச்சிடா நொள்ள கண்ணா ! கதை..


இந்தியாவின் "IIT " உலகின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களில், அதுவும் முதல் ஐந்தில் ஒன்றாக உள்ளது என்று,இந்திய "மனித வள விளம்பாத" அமைச்சர் திருமதி. ஸ்மிரிடி இராணி கூறியுள்ளார். எப்போது பார்த்தாலும் காங்கிரஸ்காரன் நாட்டை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டான் (காங்கிரஸ்காரன் நாட்டை ஏறகுறைய ஒட்டு மொத்தமாக அழித்தது மறக்க முடியாத விஷயம், மறுக்க முடியாத விஷயம், அது வேறு) என்று சொல்லி கொண்டு வரும் பிஜேபி வாயில் இருந்து இப்படி ஒரு செய்தி வந்தது சந்தோஷத்திற்கு உரியது தான்.


இந்த செய்தியை படித்தவுடன், அடே டே, நம் நாட்டை பற்றி ஓர் நல்ல செய்தி அதுவும் "பிஜேபி" தலைமையில் இருந்து, என்ன தான் என்று வலை தலத்தில் நுழைந்தேன். அங்கே, ஸ்மிர்தி இராணி - IIT  என்று கூகிளில் தட்டியவுடன் நிறைய விஷயம் வந்தது. அதில் கண்ணை கவர்ந்தது  " IIT is better than Harvard University" என்று ஸ்மிரிடி இராணி சொன்னார் என்ற செய்தி.

அடே டே, சென்ற மாதம் தானே "Yale University" ல் ஒரு வாரம் படித்து டிகிரி வாங்கினேன் என்று சொன்னார்களே, இப்போது Harvard University "ல் இன்னொரு வாரம் படித்து இன்னொரு டிகிரி வாங்கி இருப்பார்களோ என்று நினைத்து படிக்க ஆரம்பித்தேன். இதில் இவர்கள் படிக்கவில்லை, என்று அறிய வந்தேன். அதில் ஓர் ஆறுதல் தான். சரி , இப்போது என்ன தான் சொல்ல வருகின்றார்கள் என்று மேலும் படிக்க ஆரம்பித்தேன்.


இந்தியாவின் "IIT" அமெரிக்காவின் "Harvard University" ஐ விட சிறந்தது என்று கூறினார்கள். சந்தோசமே, இது சாத்தியமா? இருந்தாலும் இருக்காலும். அப்படியே இல்லாவிடிலும், இந்தியாவின் "IIT" ஒரு தலை சிறந்த நிறுவனம் என்று அனைவருக்கும் தெரியும்.

சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். இதை படித்தவுடன், ஸ்மிரிடி இராணி அவர்களை நினைத்தேன். IIT ல் பணிபுரியும், ஆசிரியர்களும் சரி, நிர்வாகிகளும் சரி, அதிகாரிகளும் சரி, எவ்வளவு படித்தவர்கள் என்று இந்த அமைச்சருக்கு தெரியுமா? அவர்கள் தங்கள் படிப்பிற்காக எவ்வளவு விஷயங்களை தியாகம் பண்ணி இருப்பார்கள் தெரியுமா? தங்களிடம் பயிலும் மாணவ மாணவியர்களின் முன்னேற்றத்திற்காக எதையும் விட்டு கொடுப்பார்கள் என்பது தெரியுமா?.

இந்த அமைச்சர் அவர்கள் மத்தியில் அமர்ந்து ஆசிரியர்களை நியமிப்பது, நிர்வாகிகளை மாற்றுவது என்று அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தில் தலையிடும் போது, அவர்கள் எப்படி மதிப்பார்கள் என்று நினைத்து பார்க்க வேண்டாமா? மோடி அவர்களே ஆசை பட்டு கொடுத்து இருந்தாலும், தானாகவே இந்த பதவிக்கு நான் தகுதியற்றவள் என்று தானே சொல்லி இருக்க வேண்டும். IIT யிலும் சரி, மற்ற கல்வி நிறுவனங்களிலும் சரி, இவர்கள் தலைமை   நாற்காலியில் அமர்ந்து இருக்கையில் ஒன்றை மட்டும் நினைவு கொள்ள வேண்டும்.. The Joke is on you.


இன்னொரு விஷயம், பதவி தான் நம் கையில் என்ற அகந்தையுடன், "கல் தோன்றி மண் தோன்றா காலம் முதல் முன் தோன்றியது " என்று சொல்லி IIT ல்  சமஸ்கிருதம் எல்லாரும் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று ஏதாவது புது விதி முறைகளை கொண்டு வந்து விடாதீர்கள். சமஸ்கிருதம் இல்லாமலே இந்த நிறுவனம் உலக புகழ் பெற்று தான் இருக்கின்றது.

மற்றும், இங்கே உள்ளவர்கள் ஆசிரியர்கள் - ஆசிரியர்களாகவே இருக்கட்டும். அவர்களை உடனடியாக குரு என்று மாற்றி இன்னொரு குப்பையை கிளறாதீர்கள். ஆசிரியர்கள் கொடுக்க வேண்டிய மரியாதையை மாணவர்கள் எப்போதும் கொடுக்க தவறியது அல்ல. தாங்கள் ஒரு கல்லூரியில் சென்று படித்து இருந்து இருந்தால் அதை அறிய வாய்ப்புண்டு. தமக்கு தான், கல்லூரி செல்லாமலே "கல்வி துறை" மந்திரி பதவி ஆயிற்றே.

கடைசியாக, நானும் "IIT"  யில் ஒரு வாரம் இருந்தேன், ஆதலால் நானும் அங்கு படித்து பட்டம் பெற்றதிற்கு சமம் என்று எங்கேயும் சொல்லிவிடாதீர்கள். அது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், சகிக்காது.

படிக்காத மேதை காமராஜரின் பரம விசிறி நான். ஏன் தெரியுமா? அவர் நேர்மை தான். படிக்காத காமராஜ், தான் படித்தவன் என்று எங்கேயும் பொய் சொல்லவில்லை. நான் படிக்காதவன், என்னை போல் அடுத்த தலைமுறையினர் படிக்காமல் போக கூடாது. தயவு செய்து படியுங்கள் என்று சொன்னவர். மேலும், இவர் காலத்தில் படிப்பதற்கு பல இடுபாடுகள் இருந்தன.

ஆனால் நம் அமைச்சர் ஸ்மிரிடி இராணி அவர்கள் 1995ல் ஒரு கல்லூரியில் B.Com முதல் வருடம் படித்தாராம். 1998ல் வேறொரு பல்கலை கழகத்தில் BA முதல்  வருடம் படித்தாராம், அதன் பின் அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற  " Yale University"ல் ஒரே வாரம் இருந்து படித்து டிகிரி வாங்கினாராம். வாயை திறந்தால் பொய். இதில் தான் எனக்கு பிரச்சனை.

அமைச்சரவையில் இந்த மாதிரி நியமனங்கள் இருந்ததில் தானே, காங்கிரஸ்காரன் ஆட்சியில் இவ்வளவு பிரச்சனை-ஊழல்-அநியாயம். அவர்களை சுத்தமாக ஒழித்து கட்டி தானே மக்கள் பிஜேபி யை முழு ஆதரவோடு தேர்ந்து எடுத்தார்கள். கல்வி துறையை நிர்வாகிக்க "பிஜேபி" யில் இந்த அம்மணியை விட்டால் வேறு எந்த பெண்மணியும் இல்லையா? நல்ல ஆட்சி வரும் என்று தேர்ந்து எடுக்க பட்டீர்கள், தயவு செய்து யாரை தூக்கி எங்கே வைக்க வேண்டும் என்று கொஞ்சம் யோசித்து செய்யுங்கள். 

ஜெய் ஹிந்த்

www.visuawesome.com

பின் குறிப்பு: நாளைக்கே நான் நினைச்சா யார் கையில் காலில் விழுந்து அமைச்சர் ஆக முடியும், ஆனால் உங்க அமைச்சர "IAS" ஆகி காட்ட சொல்லு!
(காமராஜ் அவர்களின் உதவியாளரிடம்  ஒரு IAS அதிகாரி கூறியது, இதையும் காமராஜ் அவர்கள் தவறாக புரிந்து கொள்ளாமல், உன் வாய் கொழுப்பால் என் மானத்த வாங்கிட்டியே என்று தன உதவியாளரை தான் கோபித்து கொண்டார்).

4 comments:

  1. இந்தியாவின் "IIT " உலகின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களில், அதுவும் முதல் ஐந்தில் ஒன்றாக உள்ளது என்று,இந்திய "மனித வள விளம்பாத" அமைச்சர் திருமதி. ஸ்மிரிடி இராணி கூறியுள்ளார்.///

    ithu eppothu nadanthathu endru theriyaliye...

    but world best university list la resent aa mumbai iit 222 place vanthaka padithu irukkiren sir.

    200 kila nampa alunga ponatha theriyala.

    but ninga sonna visayam ellam super.

    ReplyDelete
    Replies
    1. இன்றைக்கு தான் படித்தேன். இவர்கள் சொல்வது உண்மை என்றால் சந்தோசம் தான். ஆனால் இந்த அம்மணி வாயில் இருந்து வருவது எல்லாம் பொய்யா தானே இருக்கு. வருகைக்கு நன்றி மகேஷ்.

      Delete
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  3. என்னத்த சார் சொல்ல, பல்கலைக்கழக மானியக் குழு மூலமாக இந்தியையும் திணிக்க முயற்சி எடுத்துவிட்டார்கள், ஏதோ நாலு நல்ல அரசியல்வாதிகளால் பிழைத்தோம். காமராஜர் ஐயா படிக்கவில்லை. ஆனால் படித்தவர்களை விட நன்றாக சிந்திக்கக் கூடியவர்....பி.கு அருமை சார்... மொதல்ல இந்த அமைச்சர மாத்தணும், ஏன் பி.ஜே.பி யில் படித்த்வர்களே இல்லையா எனத் தெரியவில்லை??? நல்ல பதிவுக்கு நன்றி சார்...

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...