Tuesday, September 23, 2014

பிரதமர் மோடிக்கு "விசுAwesome" மேல் பொறாமை.

சென்ற வாரம் நான் எழுதிய " பிரதமர் மோடியின் அமெரிக்க விஜயம், நீ வரவில்லையா விசு?" என்ற பதிவு என் அருமை நண்பன் ஒருவரை சற்று கோப படுத்தியதாம். அதை படித்து விட்டு அவர் எனக்கு தொலைபேசியில் அழைக்க, நானும் அவரும் நடத்திய உரையாடல் தான் இந்த பதிவில்.  இதை இங்கே பதியும் முன் அவர் சம்மதத்தை வாங்கி விட்டேன்.

ரிங்... ரிங்... ரிங்... தொலை பேசி ரிங்கியது...விசு ஸ்ப்பீகிங்...

விசு.. ரகு பேசுறேன்...

மாப்பு... என்ன ஆளே காணும், மோடி - பிஜேபி ன்னு உயிரே விடுவியே... வாழ்த்துக்கள். முழு மெஜாரிட்டி மாப்பு, வைச்சிக்க நீ.

விசு... உன் மேல கொஞ்சம் கோவம்.

அதுக்கு உனக்கு உரிமை இருக்கு, விஷயத்த சொல்லு, என் விளக்கத்த சொல்றேன்.

போன வாரம் நீ எழுதின அந்த பதிவு....

ஒ... எழுதும் போதே யோசித்தேன் மாப்பு... நீ கூப்பிடுவன்னு, சொல்லு... அதில் எது உனக்கு பிடிக்கல...

நீ தான் இந்த நாள் வரை இந்தியா தேர்தலில் வாக்கே அளித்தது
இல்லையே... உனக்கு அது தேவையா?

நான் இந்நாள் வரை வாக்கு  அளித்தது இல்லை என்று உனக்கு எப்படி தெரியும் மாப்பு?

அந்த பதிவில் நீதானே எழுதி இருந்தாய்.

சரி, அதை நான் எழுதாம இருந்து இருந்தா கோபம் படுவியா?

விசு, எல்லா கேள்விக்கும் மறு கேள்வி போட்டே நீ சமாளிப்ப எனக்கு தெரியாதா?

ரகு, விஷயத்திற்கு வா, ஏன் என் மேல கோவம்?

இந்திய பிரதமர் வருகின்றார், அவருக்கு நீ மரியாதை செலுத்த தவறுகிறாய்.

மாப்பு... இவர் என்ன சாதித்து விட்டார் என்று நான் மரியாதை செலுத்த வேண்டும்? ஒரு நல்ல காரியம் சொல்லு பார்க்கலாம்.

என்ன விசு, இப்படி சொல்லிட்ட... இவர் ஒரு நல்ல காரியம் சாதிக்காமல இவ்வளவு பெரிய வெற்றி...?

ரகு, உன்னை நீயே ஏமாற்றி கொண்டால், அது உன் தனிப்பட்ட விஷயம். இப்ப என் காதில் பூ சுத்துற பாரு, அது என்னை நீ அவமான படுத்தும் படியா இருக்கு. இவர் பெற்ற வெற்றி, காங்கிரஸ் பண்ண அட்டூழியத்திற்கு மக்கள் கொடுத்த மகா  பெரிய அடின்னு தான் நினைக்கிறேன். மற்றபடி பிஜேபி சார்பில் யார் நின்று இருந்தாலும் பிஜேபி கண்டிப்பாக இந்த வெற்றி பெற்று இருக்கும்.

உனக்கு மோடி மேலே பொறாமை, அது தான்...

அட பாவி.. எனக்கு ஏன் ரகு அவர் மேல பொறாமை?

இல்ல அவர் வாழ்க்கையில் அவர் இவ்வளவு உயர்ந்துது விட்டாரே..அதுவாக இருக்காலாம்.

கண்டிப்பா இருக்கலாம் ரகு, ஆனால் , அவருக்கு கிடைத்த வெற்றி எதற்குமே நான் ஆசை பட்டது இல்லையே.. அவர் சின்ன வயதில் இருந்தே அரசியல் ஆசையில் வாழ்ந்தவர். இந்த பதவிக்கு வரவேண்டும் என்று அவர் என்ன என்ன எல்லாம் தியாகம் பண்ணி இருப்பாரு. அவர் உழைத்தார், வெற்றி பெற்றார், வந்தார். இந்திய பிரதமர் என்பது எவ்வளவு பெரிய பதவி, அவ்வளவு பெரிய பதவிக்கு நான் ஆசை பட்டேன் என்று நீ சொல்வதே எனக்கு பெருமை அளிக்கும் விஷயம் தான். சரி, விஷயத்திற்கு வா! எதை வைச்சி நீ எனக்கு அவர் மேல பொறாமைன்னு சொன்னே..

இல்ல நீ அவர் வருகைக்கு வர மாட்டேன்னு சொல்றியே?

டேய்.. மீண்டும் கேட்கின்றேன்.. அவர் பண்ண நல்ல காரியம் ஒன்னு சொல்லு (அத்வானியை ஓரங்கட்டியத்தை தவிர), நான் உடனே வரேன்.

அது குஜராத்தில்... அங்கே, நல்ல முன்னேற்றம் வந்து இருக்கு.

இருக்கட்டும்... குஜராத் நல்ல முன்னேறி விட்டதுன்னு வைச்சிக்க, இங்கே ஒரு படேல் இருக்க மாட்டான். இங்கே இருக்கிற குஜாராதிகளில் 90% சதவீதம் வியாபாரத்தில் இருப்பவர்கள். நீ சொலுற அளவிற்கு முன்னேற்றம்னா, ஒரு பய இங்கே இருக்க மாட்டான். அடுத்த விமானத்தில் ஏறி போய் இருப்பான். அதனால் அந்த குஜராத் முன்னேற்றம் கதையை... "நீயா -நானா  கோபி" வரும் போது பேசிக்கோ, இப்ப விஷயத்திற்கு வா...

நீ வரியா, இல்லையா...

ரகு... மீண்டும் சொல்லுறேன்.. ஒரு நல்ல காரியம் சொல்லு, வரேன்.

இப்ப தானே 100 நாள் ஆச்சி, இதுக்குள்ள எப்படி நல்ல காரியம்?

சரி, 5 வருஷம் தரேன், நல்ல ஆட்சி செய்யட்டும். அப்புறம் மீண்டும் வெற்றி பெற்று வரட்டும், கண்டிப்பாக வரேன்.

விசு, 18000 பேர் வராங்க. ஒரே திருவிழா போல இருக்க போது.

சந்தோசம். நல்லா இருங்க,

 நீயும் வா விசு.. அவர் வெற்றியில் உனக்கு என்ன பொறாமை.

மாப்பு, மீண்டும் மீண்டும் நீ பொறாமை என்று சொல்வதினால் சொல்கிறேன். பிரதமர் மோடி யாருன்னு எனக்கு தெரியும். ஆனால் நான் யாருன்னு பிரதமர் மோடிக்கு தெரியாது. தெரிந்தால் அவர் தான் மாப்பு என் மேல பொறாமை படவேண்டும்.

ஏன்னா பேசுற விசு? புரியில்ல..

மாப்பு, எனக்கு என்ன மாப்பு குறைச்சல். நான் கட்டின தாலிய வச்சின்னு என் மனைவி என்னோட சந்தோசமா இருக்கா? ரெண்டு ராசாத்திக்கள் வேறு. ஆண்டவன் புண்ணியத்தில் கொஞ்சம் படிப்பு.. (பிரதமர் மோடியின்  அருமை சகோதரி ஸ்மிரிடி இராணி போல ஒரு வாரத்தில் படித்து வாங்கிய டிகிரி இல்ல மாப்பு, "நெற்றி வேர்வை மானிட்டரில் விழ"  கஷ்டப்பட்டு சம்பாரித்து அதில் படித்து வாங்கிய பட்டங்கள்) படிப்பிற்கு ஏற்றாற்போல் ஒரு வேலை. இதுவரைக்கும் எவனும் என் மேல் அநாவசியமா (உன்னை தவிர) கோப பட்டது இல்லை. இது எல்லாவற்றிக்கும் மேல், யாருடைய உயிர்- பணம்- சொத்து பரிபோனதர்க்கும் நான் தான் காரணம்னு என்னை இதுவரை ஒருத்தன் குற்றம் சாத்தினது இல்லை. படுக்க போனா 5 நிமிஷத்தில் குழந்தை போல் தூங்க போய்டுவன். வாயில் விரல் வைத்து சுப்பாத குறை தான். இது எல்லாம் பிரதமர் மோடிக்கு வருமா?

என்னா விசு, சொல்ற.. அவருக்கு உன் மேல பொறாமையா?

நீ ஒரு காரியம் பண்ணு ரகு. அவர் இங்கே வரார் இல்லையா ... அவர் கிட்ட போய்... ஐயா. இங்கே விசுன்னு ஒருத்தர்  இருக்கார்ன்னு சொல்லி இப்ப நான் சொன்னது எல்லாம் சொல்லு, அப்புறம் அவரே சொல்லுவார். விசுவை பார்த்தா பொறாமையா இருக்குன்னு...

சரி விசு, 5 வருஷம் கழித்து  கண்டிப்பாக மீண்டும் வருவார். அப்ப நீ வரணும்.
கண்டிப்பா வரேன். ஆனால் ஒரு கண்டிசன். 5 வருஷம் கழித்து நீ அவர் செஞ்ச நல்ல காரியம் ஒன்னாவது சொல்லணும்..அப்பத்தான் வருவேன். இப்ப நான் வரவில்லை என்று ஒன்றும் கவலை படாதே. ஏற்கனவே 18000 டிக்கெட்டும் வித்தாச்சின்னு  கேள்வி பட்டேன்.

என்னாது 18000 வித்தாச்சா? நான் இன்னும் வாங்கலையே விசு.

முட்டாள் ரகு, உன் வேலைய பார்க்காமல் என்னைப்பற்றியும் பிரதமர்  மோடியை பற்றியும் கவலை படுறியே,

இப்ப என்ன செய்வேன் விசு.. ஒரு டிக்கெட் வேணும்மே.

பக்கத்தில் இருக்கும் மொடேல் -ஹோட்டல் எங்கேயாவது போ.நம்ம படேல் சகோதர்கள் இருப்பார்கள், 5-10 போட்டு தரேன்னு சொல்லு, டிக்கெட் கிடைக்கும்.

சரி விசு..

சரி ரகு, போவதருக்கு முன்னால் ஒரு விஷயம்.. நான் இதுவரைக்கும் ஒட்டு போட்டது இல்லைன்னு யாருக்கும் சொல்லிடதே.

ஏன் விசு?

இல்லை ரகு, போன பதிவை பார்த்து விட்டு இந்தியாவில் இருந்து செய்தி வந்தது, நான் வெளி நாட்டில் இருந்தாலும் என் பெயரில் நாடாளுமன்றத்தில்இருந்து போன வாரம் நடந்த ஊராட்சி தேர்தல் வரைக்கும் யாராவது ஒருத்தன் என் கடமையை ஆற்றிவிடுகின்றானாம்.

www.visuawesome.com

4 comments:

 1. அடப்பாவிகளா. பட்டேல்காரங்க இந்த டிக்கெட்ட கூட பிளாக்குல வித்து சம்பாதிக் கிராங்களா,,,,,?

  ReplyDelete
  Replies
  1. நல்ல கணக்க மாத்து.. கள்ள பணத்த ஏத்து. நல்ல நேரம் பார்த்து, நண்பனை ஏமாற்று....- சந்திரபாபு.


   www.visuawesome.com

   Delete
 2. சினிமா நடிகர்களைப் ரசிப்பது போல் அரசியல்வாதிகளையும் ரசிப்பது எனக்கும் பிடிப்பதில்லை..

  ReplyDelete
 3. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள், இந்த 100 நாளில் அவர் சுற்றுலாபோல நாடுகளுக்கு பறப்பதும், வாயிலேயே வடை சுடுவதையும் தவிர உருப்படியாக ஏதாவது செய்து இருக்கிறாரா??/

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...