சனி, 13 செப்டம்பர், 2014

(7)மூன்றாம் பிறை - தொடர் கதை

மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

தொடர் கதை... (சென்ற இடுகை படிக்க இங்கே சொடுக்கவும்)

வயதான காலத்தில் அப்பாவிற்கு நம்மால் என்ன ஓர் டென்சன். அன்று மட்டும்... "வான் எங்கும் தங்க விண்மீன்கள்" என்று ஆடி பாடி கொண்டு இருந்த அன்று மட்டும், அந்த விபத்து நடந்து இராவிட்டால்...இராவிட்டால்,



இன்று இவனை அறிந்து இருக்க முடியாதே! யார் இவன்? இவனை பார்க்க அப்பா ஏன் அடித்து பிடித்து ஊட்டி போகிறார். எங்கு போனாலும் என்னை அழைத்து கொண்டு போகும் அப்பா இன்று மட்டும் என்னை விட்டு விட்டு போவது ஏன்...என்று நினைத்து கொண்டு வாகனத்தை திறந்து உள்ளே நுழைய முயன்றவள், ஒரு முரட்டு கரம் தன தோளை அழுத்துவதை உணர்ந்தாள்.

திரும்பி பார்கையில்..கத்தியோடு கதிர், சாராய நாற்றத்தோடு மிரட்டினான்..

விஜயா, மரியாதையா, சத்தம் போடாமல் காருக்குள ஏறி நான் சொல்ற மாதிரி செய்.

கொஞ்சம் சுதாரித்து...

நான் விஜயா இல்ல, நீ வேற யாரையோ தேடுற..

உன் பெயர்...பெயர்... என்னவா இருந்தா என்னா? மரியாதையா வண்டியில் ஏறு

என்று மிரட்டிய அவன் அடுத்து நடந்ததை எதிர் பார்க்கவில்லை.

அவன் சொல்லிய படியே வண்டியில் ஏறும் போல் நடித்த லட்சுமி, அவன் சற்று திரும்பிய வேளையில், கிடைத்த அந்த வினாடியில், கண் இமைக்கும் நேரத்தில், தன் முழு உடம்பையும் சுழற்றி, திரும்பி அவன் கை இரண்டையும் கொக்கி பிடி போட்டு, தன் காலை மடித்து, முட்டியால் அவனின் "படாத இடத்தின்" மேல் தாக்க அவன் LBW (Leg Below the Wicket)ஆனான்.

கதிரின் கதி அதோகதி ஆயிற்று.

சென்ற முறை இவளை பார்க்கும் போது, மருத்துவமனையில் சுயநினைவு இல்லாமல் மன நோயாளியாக இருந்தாள். மிகவும் எளிதாக அம்மாவை பார்க்க வேண்டுமா? என்னோடு வா என்று சொன்னவுடன் குழந்தை போல் ஓடி வந்தாள். இப்போது தான் சுய நினைவு வந்து விட்டதே. அது மட்டும் அல்லாமால், 7 வயது துவங்கி நேற்று வரை பழகி வந்த "கராத்தே" வேறு. வெள்ளை - மஞ்சள்-ஆரஞ்ச் என்று ஆரம்பித்து கருப்பு "பெல்ட்" வரை பெற்றவள் ஆயிற்றே. இத்தனை நாள் பயிற்சிக்கு நல்ல தீனியாக கதிர் மாட்டினான்.

அவன் கையை நன்றாக திருகி.....

சொல்றா... யார் நீ...

மேடம், சாரி மேடம்.. நான் சாதா "பிக் பாக்கெட்" தான், தெரியாம உங்களை மிரட்டிடேன்.

கையை இன்னும் சற்று இறுக்கி, எங்கே மீண்டும் சொல்லு...யார் நீ? என்னை உனக்கு எப்படி தெரியும்?

உண்மைய சொலுறேன், உன்னை எனக்கு தெரியாது, நான் பிக்பாக்கெட் தான்.

அப்ப ஏன்டா, என்னை "விஜயா"ன்னு பேர் சொல்லி கூப்பிட.. உண்மைய சொல்லலே, இங்கே இருக்கே ரயில்வே போலிஸ் அவர்களிடம் போய் விட்டு விடுவேன்.

மீண்டும் இறுக்கினாள். வலி தாங்க முடியாமல் கதிர் பேச ஆரம்பித்தான்.

மேடம், நீங்க யாருனே எனக்கு தெரியாது, கொஞ்சம் நாளைக்கு முன் ஒரு ஹாஸ்பிடலில் அழுது கொண்டு இருந்தீர்கள், ஏன் அழுற என்று கேட்டேன், அம்மா வேண்டும்  என்றீர்கள். உங்களை ஏமாற்றி ஒரு விபசார விடுதிக்கு விற்று விட்டேன். என்னை மன்னித்து  கொள்ளுங்கள்.

அதை  கேட்டவுடன் சில நொடிகள் அலறி விட்டாள் லட்சுமி. ஒரு வேளை பொய் சொல்லுகிறானோ என்று நினைத்தவள் சற்று சுதாரித்து, பிறகு என்ன நடந்தது என்று விசாரித்தாள்.

என்ன ஆனது என்று எனக்கு தெரியாது மேடம், ஆனால், அங்கே ரெண்டே நாள் தான் இருந்தீர்கள். உங்களின் மனநோயினால்  அங்கே உள்ளவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. அந்த நேரத்தில் தான் யாரோ ஒருவர் உங்களை வெளியே அழைத்து போகிறேன் என்று சொல்லி அழைத்து சென்றார். அதற்க்கு பிறகு நீங்க இங்கே வரவேயில்லை.

என்னை அழைத்து போனது யார் என்று தெரியுமா?

அவர் உள்ளே நுழையும் போது பார்த்து இருக்கேன். அவர் எதிரில் வந்தால் சொல்ல முடியும்.

ஒரு கையில் பிடித்த பிடியை விலகாமல், மறு கையில் தன். பையில் இருந்த அந்த படத்தை எடுத்து, இது அவரா?

ஆமாம் மேடம், இதே ஆள் தான்.

அதை கேட்டதும், அவள் சற்று தடுமாற, கதிரேசன் எனப்படும் கதிர் ஓட ஆரம்பித்தான். அவன் அங்கே இருளில் மறைவதை பார்த்து விட்டு...

விபசார விடுதியில் இவர் என்னை பார்த்தாரா. அங்கே இருந்து என்னை வெளியே அழைத்து சென்றாரா?

"அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்"

என்று என் நினைவில் வந்து பாடும் இவர் ஏன் விபசார விடுதிக்கு சென்றார்.

அருகில் இருந்த பொது தொலைபேசியில் இருந்து..

அம்மா, லட்சுமி பேசுறேன்.

சொல்லும்மா, அப்பா ட்ரெயினில் போய்ட்டாரா?

அம்மா, இன்னும் அரை மணி நேரத்தில் நான் ஊட்டிக்கு போறேன். நீங்க வேண்டும் என்றால் என்னோடு வரலாம்.

ஏன், லட்சுமி, இப்ப என்ன அவசரம்?

ரொம்ப அவசரம், நீங்க வரீங்களா இல்லையா?

அப்பாவிடம் கூட சொல்லிலையே லட்சுமி, இப்ப என்ன பண்றது.?

அம்மா, நம்ப இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பினால், அப்பாவிற்கும் முன்னால போய் சேர்ந்து விடலாம். நம்பதான் காரில் போறோம் இல்லை.

சரி, உனக்கு ஏதாவது பேக் பண்ண வேண்டுமா?

கொஞ்சம் துணி மணி மட்டும் எடுத்துக்க...

சரி லட்சுமி..

அம்மா, கடைசியா ஒரு விஷயம், நீ வரும் போது உன் பயத்தை எல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு வந்துடு.

ஏன் லட்சுமி.

ஊட்டி வந்தவுடன் சொல்லுறேன்.

போனை வைத்து விட்டு வீட்டிற்கு வண்டியை செலுத்தினாள்.

வீட்டில் அம்மா...

எவ்வளவு சொல்லி இருப்பேன், லட்சுமி அப்பாவிடம்,

பொண்ண பொண்ணா வளர்க்காமல் ஒரு ஆம்பிளை மாதிரி வளர்த்து வச்சி இருக்கார். இதில , கராத்தே வேறு..

இந்த கராத்தே தான் அவளை இன்று காப்பாற்றியது என்று அம்மாவிற்கு தெரியவில்லையே..

அந்த ரயிலில் அப்பா, ஆண்டவா.. ஊட்டிக்கு ஏன் போறேன், எதுக்கு போறேன்னு கூட தெரியல.. நீ தான் எல்லாரையும் காப்பாத்தனும்.

 அங்கே ஊட்டியில், சீனுவை பார்த்த சந்துரு.... அதிர்ந்து போய்....

தொடரும்...அடுத்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்

www.visuawesome.com

5 கருத்துகள்:

  1. வணக்கம்
    தொடர்கதை மனதை அள்ளிச்செல்லுது... நன்றாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    த.ம 2வது வாக்கு

    -ரூபன்-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரூபன் அவர்களே. வாக்குக்கும், வருகைக்கும், வார்த்தைக்கும்...

      நீக்கு
  2. நன்றாக போகிறது. எங்கே அவர்களிடம் மாட்டிக்கொள்வாளோ என்று தான் ஊகித்தேன், ஆனால் நடந்தது வேறு இப்பவும் வெயிட்டிங் பார் கமல் சார் ஓப்பனிங்க், கலக்குங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜெயசீலன், தங்கள் வருகைக்கு. கமல் ஓபனிங் வந்து கொண்டே இருக்கின்றது...

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...