செவ்வாய், 9 செப்டம்பர், 2014

(3)மூன்றாம் பிறை - தொடர் கதை

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும்

தொடர் கதை... (சென்ற இடுகை படிக்க இங்கே சொடுக்கவும்)

மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

பாக்கி, உங்க அம்மா உன்னிடம் எதோ பேச வேண்டுமாம்.... கொஞ்சம் சமையல் அரை வரைக்கும் வா...என்று அழைத்த தன் அப்பாவின் குரலை கேட்ட லக்ஷ்மிக்கு ஒரே ஆச்சரியம். எது வேண்டும் என்றாலும் என்னிடம் நேராக ஓடி வந்து சொல்லும் என் அப்பா, இன்று அம்மா, உன்னை அழைக்கின்றாள் என்று சொல்கிறாரே.. என்னவாய் இருக்கும்?




ஏதோ எழுதி கொண்டு இருந்தவள், திடீரென்று எழ, அருகில் இருந்த இங்க் பாட்டில் கீழே உடைந்து சிதறியது... பரவி கிடந்த அந்த மையை பார்க்கையிலே....

"நான் தான் சமையில் முடிச்சிட்டு எடுத்து தரன்னு சொன்னேன் இல்ல,. நீ ஏன்  இப்ப அவசர பட்டு இப்படி கொட்டி வைச்சி இருக்கிற" என்கிற ஆண் குரலை கேட்டு ... இது அப்பா குரல் இல்லையே.. இதுவும் அவன் தானோ என்று வியந்து கொண்டே...ஒரு வினாடி தடுமாறி.. அம்மாவிடம் சென்றாள்.

என்ன அம்மா... என்ன பேச போகிறாய்...

கல்யாணம் பற்றி பேச வேண்டும்.

அப்பாவிடம் கேட்டு விட்டாயா?

அவர் சொல்லிதான் இந்த முடிவிற்க்கே வந்தேன்.

யாரு மாப்ளை?

இங்கே பக்கத்தில் தான், வங்கி அதிகாரியாக இருக்கிறார்.

அப்போ கல்யாணம் பண்ணி கொண்டு நீ போய்விட்டால் நானும் அப்பாவும் எங்கே இருப்போம்?

அடி பாவி.. கல்யாணம் எனக்கு இல்லை, உனக்கு.

அம்மா, எனக்கு இப்ப ஏன் கல்யாணம். நான் சந்தோசமா இருகின்றது உனக்கு பிடிக்க வில்லையா?

ஏன் அப்படி சொல்ற? கல்யாணம் பண்ண நான் சந்தோசமா இல்லையா?

நீ சந்தோசமா தான் இருக்க... ஆனால், அங்க பார், உன் வீட்டுக்காரரை, எதோ மந்திரிச்சி விட்டவர் போல் இருக்கார். எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்மா.

இல்லைமா, மாப்ளை வீட்டு  ஆளுங்க இன்னைக்கு சாயங்காலம் வருவோம் என்று சொல்லி விட்டார்கள். இப்ப வேண்டாம் என்று சொன்னால் நன்றாக இருக்காது.. அவங்க வரட்டும், நீ அவரை பார்.. மற்றதை பிறகு பேசி கொள்ளாலாம்.

அப்பாவிற்காக ஓகே, ஆனால் எனக்கு இதில் சம்மந்தமே இல்லை.

அன்று மாலை...

மாப்பிள்ளை  வீட்டார் , வங்கி அதிகாரி மாப்பிள்ளையுடன் லக்ஷ்மி வீட்டில்..

தம்பிக்கு 32 வயசு ஆகுது, பெயர் சந்துரு,வேலை, வங்கி ப்ரோமோசன் அப்படி இப்படின்னு தள்ளி போட்டுட்டு வந்துட்டான். இப்ப கண்டிப்பா சொல்லிட்டோம். கல்யாணம் பண்ணியே ஆக வேண்டும் என்று. இன்னும் பொண்ணு  போட்டோ கூட பார்க்கவில்லை. கொஞ்சம் பொண்ண கூப்பிடுங்க... தம்பி எவ்வளவு நேரம் தான் காத்து கொண்டு இருப்பான்? என்று " புரோக்கர்  " சொல்ல, மாப்பிள்ளை அசடு வழிந்தான்.

அங்கே... ஒரு தட்டில் காப்பியுடன்... "பாக்யலக்ஷ்மி" மங்களகரமாக எதிரில் வந்து நின்றாள். அவளை பார்த்தவுடன் வங்கி அதிகாரி மாப்பிள்ளை அதிர்ந்தே போய்  விட்டான்...

இவளை ... இவளை... இவளை... எங்கேயோ பார்த்து இருக்கின்றேனே...

ஒ மை காட்... இவள் அந்த விபசார விடுதியில் என் நண்பன் சீனுவோடு இருந்தவள் தானே.. பிறகு சீனு இவளை ஊட்டிக்கு அல்லவா அழைத்து சென்றான்.. சிறு குழந்தை போல் அல்லவா அன்று  நடந்து கொண்டாள். இவள் எங்கே இப்படி...சீனுவிற்கு என்ன ஆயிற்று?

என்ன தம்பி.. பெண்ணை பார்த்தவுடன் பேய் அறைந்தது போல் ஆகி                விட் டீர்கள்... நான் அப்பவே சொல்லலே ... மகாலட்சுமி போல் இருப்பாள் என்று... சொல்லி தன் புரோக்கர் பீசை உறுதி ஆக்கி கொண்டார்.

சரி,  நாங்கள் ரெண்டு நாளில் சொல்லி அனுப்புகிறோம் என்று அங்கே இருந்து கிளம்பினர்.

இவள் இங்கே தன் வீட்டிற்க்கு  திரும்பி சுய நினைவோடு இருகின்றாள் என்றால் ... சீனுவிற்கு என்ன ஆயிற்று..?

தொலை பேசியை எடுத்தான்..

ஹலோ... ஊட்டி... பள்ளிகூடமா..

ஆமாங்க.. நீங்க யார்...

அங்கே ஸ்ரீநிவாசன்  ஆசிரியர் இருக்காரே? அவரிடம் பேச முடியுமா?

நீங்க யார் சார்? அவருக்கு நீங்க என்ன வேண்டும்?

என் பெயர் சந்துரு, நான் அவர் நண்பன், இங்கே மதராசில் இருந்து பேசுறேன்..

சார், அவர் கொஞ்சம் நாளா....நீங்க கொஞ்சம் தயவு பண்ணி இங்கே ஊட்டி வருகின்றீர்களா?

சீனுவிற்கு என்ன ஆச்சி சார்..? எப்படி இருக்கார்?

நீங்க இங்கே வாங்க சார், நேர பேசிக்கொள்ளலாம்.

அவர் உயிர்க்கு எதுவும் ஆபத்து இல்லையே?

இல்ல சார், நீங்க புறப்பட்டு வாங்க.

அன்று இரவே சந்துரு ரயிலில் புறப்பட்டான்.. தண்டவாளத்தில் "தடக் தடக்" என்று ரயில் புரண்டு ஓட..

அங்கே ஊட்டியில்.. காதை தண்டவாளத்தில் இறுக்கி வைத்து கொண்டு...ரயில் வருமா ராமா? ரயில் வருமா ராமா? என்று சிறு பிள்ளை போல் கேட்டு கொண்டு இருந்தான் சீனு.

அவன் அருகில், வாலை ஆட்டி கொண்டு.. "சுப்பிரமணி"...

தொடரும்...அடுத்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்

9 கருத்துகள்:

  1. திரைப்படமாக எடுக்க முற்றிலும் தகுதியுள்ள இந்தக் கதை காமிரா கவிஞன் திரு.பாலுமகேந்திராவுக்கு நீங்கள் அளிக்கும் சிறந்த அஞ்சலிக்கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழைக்கேற்ற எளுருண்டை போல் தான் என் எழுத்துக்கள். உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.

      நீக்கு
  2. கமல் போர்சனுக்கு வந்தாச்சா , சூப்பர் சார், அடுத்து என்ன நடக்கும் என காத்திருக்கிறோம். நடுவிலே கலக்கல் காமெடி சார், நீ கல்யாணம் பண்ணி போயிட்ட நனும் அப்பாவும் எங்க போவோம்.. சூப்பர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜெயசீலன். கமல் போர்சன் போகவே பயமா இருக்கு. எழுதும் போதே ஒரு சோகம். இவன் நிலையை எப்படி மற்றவர்களுக்கு எடுத்து சொல்வது? என்னால் முடிந்ததை செய்கிறேன். வருகைக்கும் பின்னூடதிர்க்கும் நன்றி. பாலு அவர்களின் படத்தில் (சதி லீலாவதி தவிர, அதை கூட நான் பார்க்கவில்லை) காமடி சற்று கம்மியாகவே இருக்கும். அதனால தான், நகைசுவையை சற்று தள்ளி வைத்துள்ளேன்.

      நீக்கு
  3. anna kadhai super.. "unn kanavanai par manthiricha mari irukar "" ithu super.. super nagaichuvai.. avaludan expecting the rest - Atlanta sister..

    பதிலளிநீக்கு
  4. இதுபோல படங்கள் இனியும் வந்தால் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  5. //புரோக்கர் பீசை உறுதி ஆக்கி கொண்டார்//
    - யப்பா, என்னவொரு சிலேடை?! வியக்கேன்..!!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...