Friday, September 5, 2014

செப் 20, JJ சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு - கண்ணோட்டம்

செப் 20, சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு.

அடேங்கப்பா... 18 வருடம் கழித்து, கோடிகணக்கான பணம், நேரம் சென்ற பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு  என்று வந்து உள்ளது.   செப் 20ம் தேதி குற்றம் சாட்டபட்டவர்களான மாண்புமிகு முதல் அமைச்சர் ஜெயலலிதா, தோழி சசிகலா மற்றும் பலர் நீதி மன்றத்தில் கண்டிப்பாக ஆஜாரகவேண்டும் என்று நீதிபதி உத்தரவு இட்டுள்ளார்.


(I dont own this picture)

செப் 20ம் தேதி.... தமிழ்நாட்டின் அரசியலின் தலை விதியை மாற்றும் நாளாக இருக்குமா? பொருத்து இருந்து பார்க்க வேண்டும்.

மேலே போகும் முன் இந்த வழக்கின் சுருக்கம். 1991-1996 (5 வருடங்கள்) முதல்வராக இருந்த போது, 1 ருபாய் சம்பளம் பெற்று வந்த ஜெயலலிதா அவர்கள் 66 கோடி சேர்த்ததாக சுப்ரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கு.

இந்த வழக்கின் முடிவு இந்த செப் 20ம் தேதி வருகின்றது என்ற செய்தியை படித்தவுடன், நம் மக்கள் இதை பற்றி என்ன சொல்லுகின்றார்கள் என்பதை இந்த செய்தியின் பின்னூட்டத்தில் படித்தேன். அதில் கிடைத்தவைகளை இங்கே தொகுத்து வழங்குகிறேன்.


  • நிறைய வாசகர்கள், இது ஜெயலலிதாவின் அரசியல் அறியாமையை தங்களுக்கு சாதகமாக்கி அவரோடு இருந்தவர்கள் செய்த சதி. ஜெயலலிதா அவர்கள் இதில் சம்பந்தபட்டு இருந்தாலும், அவர்களுக்கு தெரியாமல் அனேக தில்லு முல்லுகள் நடந்து இருப்பதால், அவர்களை விடுவித்து விட்டு மற்றவர்களை கைது செய்ய வேண்டும். 

  • இரண்டாவதாக பல வாசகர்கள், தவறு தவறு தான். இவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர்கள், தம் கடமையை ஒழுங்காக செய்து இருக்க வேண்டும், அவர்கள் சேர்த்த பணம் மக்களின் வரி பணம். கண்டிப்பாக கைது செய்தே ஆக வேண்டும், அது மட்டும் இல்லாமல் இனிமேல் பொது வாழ்க்கையில் இவர் ஈடுபடாமல் தண்டிக்க பட வேண்டும்.

  • மூன்றாவதாக பலர், அம்மையார் அவர்கள் 91-96ல் பல தவறுகள் செய்தது மறுக்கமுடியாத உண்மை. அது அவர்களின் அறியாமை, அரசியலுக்கு வந்த புதிது. ஆனால் அதற்க்கு பிறகு அவர் ஆட்சியில் அவர்கள் நன்றாக செயல் பட்டதை மனதில் வைத்து இவரை கண்டித்து விடுவிக்க வேண்டும்.

  • நான்காவதாக பலர், தயவு செய்து இவரை கைது செய்யாமல் விடுவியுங்கள். இவர்  அரசியலுக்கு முற்று புள்ளி வைத்தால் தி மு க மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புண்டு. இவரின் 66 கோடி தி மு க விற்கு ஜுஜுபி.


  • மற்றும் பலர், தி மு க மற்றும் அதி மு கவை ஒழித்து கட்ட இதுவே "மோடியின் பிஜேபி" க்கு நல்ல தருணம். தி மு க ஒழிந்து ஆகி விட்டது. இந்த நேரத்தில் அம்மையாரையும் ஒழித்து விட்டால் பின்னர் தமிழ்நாடும் தம் வசம் ஆகலாம் என்ற ஒரே காரணத்தினால் இந்த தீர்ப்பு அம்மையாருக்கு எதிராக இருக்கும் என்பதே.


இந்த தீர்ப்புக்காக யார் ஆவலோடு இருகின்றார்களோ இல்லையோ, முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (இவரை மாண்புமிகு என்று அழைக்க மனதில் இடம் இல்லை) மிகவும் ஆவலோடு இருகின்றார் என்று ஒரு பேச்சு.

ஆட்டம் துவங்கட்டும், ஸ்டார்ட் அக்சன்!

http://www.visuawesome.com/

3 comments:

  1. வணக்கம்
    மிக அட்டகாசமான பார்வை நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்குநன்றி
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அம்மையாருக்கு இருக்கும் டென்சனைவிட திமுகவுக்கதான் அதிகமாக இருக்கும், பார்ப்போம் எனக்கென்னவோ இதிலிருந்து தப்பித்துவிடுவார் என்று தான் நினைக்கிறேன் ( மோடி நட்பு )

    ReplyDelete
  3. பின்னூட்ட தகவல்கள் அனைத்துமே உண்மை.

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...