என் வலைத்தளம்!

Thursday, September 4, 2014

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் எனக்கு மிகவும் பிடித்தது...


மீண்டும் சொல்கிறேன். மோடியின்  பிஜேபி  பெரும்பான்மையான வெற்றிக்கு காரணமே 'காங்கிரஸ் மற்றும் கூட்டணியின் ஊழல்" நிறைந்த ஆட்சி தான். கடந்த 10 வருடங்களில் இவர்கள் செய்த அட்டூழியத்திற்கு அளவே இல்லை. அதனால் தான் இவர்களுக்கு வரலாறு காணாத தோல்வி கிட்டியது.

மேலும்  பொது மக்களும் சரி, ஊடகங்களும் சரி, சில வருடங்களுக்கு முன்னால் போல் இல்லாமல் சற்று விழித்து கொண்டனர். தற்போது எந்த அதிகாரியும் சரி, அரசியல்வாதிகளும் சரி ஊழல் என்று போனால், முன்பு போல் இல்லாமல் இப்போது விஷயம் வெளியே வர வாய்ப்பு உள்ளது. அதனால் இவர்கள் அனைவரும் சற்று கவனமாகவே இருக்கின்றனர்.

பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன், நிறைய செய்வோம் என்று ஒரு வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளனர். இந்த ஆட்சி வந்து இப்போது 100 நாட்கள் ஆகிவிட்டது. இந்த 100 நாட்களில் பிரதமர் மோடியின் ஆட்சியில் எனக்கு பிடித்தது என்ன என்று ஒரு கேள்வி.

இந்த கேள்விக்கு நான் மட்டும் பதில் அளிக்காமல் எனக்கு தெரிந்த மற்றும் ஒரு ஐந்து பதிவர்களிடமும் வைக்கின்றேன். இந்த பதிவர்களும் , இதற்க்கு பதில் கூறிவிட்டு, அவர்களுக்கு அறிமுகமான 5 பதிவர்களுக்கு இந்த கேள்வியை கேட்டு வைக்குமாறு தயவு கூறி கேட்டு கொள்கிறேன்.
நன்றி.

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் எனக்கு மிகவும் பிடித்தது...

திரு அத்வானி அவர்களை ஓரம்கட்டி உன்னால் இந்நாட்டுக்கு பயன் எதுவும் இல்லை என்று அவரை வீட்டிற்கு அனுப்பியது...

கீழ் வரும் பதிவர்கள் இதற்கு பதில் கூறுமாறு வேண்டி கொண்டு....

அவர்கள் உண்மைகள்

மாடிப்படி மாது

பரதேசி

மைதிலி

தளிர் சுரேஷ்.

பின் குறிப்பு :
இந்த ஐந்து பேர் மட்டும் இல்லாமல், இதை படிக்கும் மற்ற எந்த பதிவர்களும் பதில் சொன்னாலும் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

9 comments:

  1. அத்வானியை ஓரங்கட்டியது,, இதுல ஏதோ உள் குத்து இருக்க மாதிரி தெரியுதே?? அப்போ ஆட்சி அளவுள உங்களுக்கு ஒன்னும் புடிக்கல, ம்ம் பார்ப்போம்.. மோடி 100 நாள் பற்றி நானும் எழுத நினைத்தேன், இரவு எழுதி நாளை மாலை ரிலீஸ் செய்தால் போச்சு....

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயசீலன் அவர்களே.. ஆட்சி அளவில் 100 நாட்களில் ஒன்றும் செய்யவும் முடியாது, சொல்லவும் முடியாது. எந்த கேள்வியை கேட்டாலும், காங்கரஸ் காரன் ஆட்சியானால் வந்த வினை என்று ஒரு தேஞ்ச ரெகார்ட் சத்தம். காங்கிரசின் ஊழல் தான் ஊரறிந்த விஷயம் ஆச்சே. அதே திருப்பி திருப்பி சொன்னா.?
      நீங்களும் பங்கு பெறுவது மிக்க மகிழ்ச்சி. உங்கள் பதிவை எதிர்ப்பார்த்து கொண்டு...

      Delete
  2. எனது பதில்கள் கீழே உள்ள இணைப்பில்

    http://maadipadimadhu.blogspot.com/2014/09/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாடிப்படி மாது. அரசாங்கத்தின் மேல் நல்லதோர் மதிப்பை வைத்துள்ளீர். 5 பதிலுக்கும் நன்றி. நான் 5 பேரிடம் பதில் கேட்க்க சொன்னதே, மற்ற நண்பர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளத்தான். இது அவர்களை தொந்தரவு செய்யும் என்று நினைக்க வில்லை. தங்கள் பதிலுக்கு நன்றி.

      Delete
  3. மோடி ஆட்சியில் எனக்கு பிடித்து என்று சொல்வதைவிட இந்த நூறு நாளில் அவர் செய்த சாதனைகள் என்ன என்பதை சொல்லாம்.. அவர் என்ன சாதனைகள் இந்த 100 நாளில் செய்தார் என்பதை இன்னும் சில மணிநேரங்களில் பதிவாக வெளியிடுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆவலுடன் எதிர் பார்த்து...

      Delete
    2. மோடி அரசாங்கத்தின் 100 நாள் சாதனை http://avargal-unmaigal.blogspot.com/2014/09/100-100-days-of-modi-government.html

      Delete
    3. நண்பா... நான் கேட்டது சாதனையை... நீ சொல்வது...வேதனை, சோதனை ...

      Delete
  4. அண்ணா லேட்டா தான் பார்த்தேன். மன்னியுங்கள். இதோ எழுதியிருக்கிறேன். படிச்சுட்டு சொல்லுங்க.

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...