திங்கள், 8 செப்டம்பர், 2014

(1) மூன்றாம் பிறை - தொடர் கதை

மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

லக்ஷ்மி மீண்டும் சென்னைக்கு வந்து... தம் பெற்றோர்களுடன் சேர்ந்து தன் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றாள். கடந்த ஒரு வருடத்தில் என்ன ஆனதே என்று அவளுக்கு தெரியவில்லை. அவளின் அப்பா அவளிடம், நீ விபத்திற்கு உள்ளாகி, சுய நினைவை இழந்தாய், அதனால் உனக்கு சிகிச்சை அளிக்க உன்னை ஊட்டிக்கு அனுப்பி வைத்தோம் என்றொரு பொய் சொன்னார்.

மீண்டும் அதே நண்பர்கள், அதே பாட்டு.. "வான் எங்கும் ... தங்க விண்  மீன்கள்" என்று பாடி கொண்டு நாட்களை கடத்தி கொண்டு இருக்கையில்... ஒரு நாள் ....பூங்காவில் ... ஒரு சிறிய நாய் குட்டி..அவளை நோக்கி ஓடிவர... தன்னையும் அறியாமல் .."சுப்ரமணி" என்று அழைக்க... அருகில் இருந்தவர்கள்...யாராவது நாய் குட்டிக்கு "சுப்பிரமணி" என்று பெயர்வைப்பார்களா? உனக்கு என்ன கிறுக்கு பிடித்து விட்டதா என்று கேட்க்க....அவளுக்கு ஒரே குழப்பம்..


நான் ஏன் அந்த நாய் குட்டியை "சுப்ரமணி" என்று அழைத்தேன்... என்று குழம்பி கொண்டு இருக்கையில்.... அவள் எதிரே இருந்த கூட்டத்தில் இருந்து... "அட்ரா ராமா", "அட்ரா ராமா" என்றொரு சத்தம்..."  அது யாரிடம் இருந்து வருகின்றது என்று பார்க்க அந்த கூட்டத்தை மீறி போய் பார்க்கையில் .. அங்கே ஒருவர் ஒரு குரங்கை வைத்து கொண்டு வேடிக்கை காட்டி கொண்டு இருந்தார்.

இவள் தன்னையும் மீறி, "எங்க குடிக்க கொஞ்சம் தண்ணி எடுத்து கொண்டுவா"என்று கேட்க்க அனைவரும் சிரித்து விட்டனர்.

முதலில் "சுப்பிரமணி" என்ற நாய், இப்போது குரங்கு, என்னவென்று புரியாமல் நேராக வீட்டிற்க்கு  சென்று தன் தகப்பனின் மடியில் படுத்தாள். தன்னையும் அறியாமல் மனதில் ஒரு சோகம், தன்னையும் மீறி இமையில் கொஞ்சம் ஈரம். யார் இந்த "சுப்பிரமணி", யார், ஏன் இந்த "அட்ரா ராமா"? என்று யோசித்து கொண்டே தகப்பனின் மடியில் படுத்து கொண்டு இருந்தவளுக்கு...எங்கோ இருந்து ஒரு பாடல் கேட்கின்றது...

"கண்ணே கலை மானே, ...."

அப்பா, எப்ப இருந்து நீங்கள் பாட ஆரம்பித்தீர்கள், நன்றாக பாடுகின்றீர்களே...
நான் எங்கே பாடினேன், பாக்கி . நான் பாடவே இல்லையே..

நீங்கள் பாடினீர்கள், நான் கேட்டேன், அதுவும் எனக்கு தெரிந்த பாட்டு..
எங்கே மீண்டும் பாடுங்கள்...ப்ளீஸ்.

எனக்கு பாட வராதுமா , நீ படு.

தன் அறைக்குள் போன லக்ஷ்மிக்கு தூக்கம் வரவில்லை, மனதில் மீண்டும் அந்த சுப்பிரமணி என்ற சின்ன நாய் குட்டி, மற்றும் அந்த குரங்கு.... மீண்டும் அந்த "கண்ணே கலை மானே" பாட்டு..

புரண்டு புரண்டு  படுத்தவள் சிறிது நேரம் கழித்து தூங்க போன பின், அவளின் தகப்பனார், தொலை பேசியை எடுத்து அந்த வைத்தியரிடம் ...

நான் பாக்கியலட்சுமி அப்பா பேசுறேன்.

நான் வைத்தியர் பேசுறேன், லட்சுமி எப்படி இருக்கா?

அய்யா, அவளை பற்றி தான் பேச வந்தேன், நன்றாக இருந்த அவள், இன்று மாலை எதோ நாய் குட்டி, மற்றும் குரங்கு என்று பேச ஆரம்பித்து விட்டாள். எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்கின்றது. அவளை உங்களிடம் அழைத்து வரட்டும்மா?

இப்போது ஒன்றும் அவசியம் இல்லை. அவளை நன்றாக தூங்க சொல்லுங்கள், வேளைக்கு சாப்பிட வேண்டும். ஒரு வாரம் பாருங்கள், பின்னர் நாம் முடிவு செய்யலாம்.

எதோ தனக்கு ஒரு பாட்டு தெரியும் என்றும், அதை நான் பாடினேனா என்றும் கேட்கின்றாள்.

சில நேரங்களில் சிலருக்கு தாங்கள் சுயநினைவை இழந்த பிறகு "என்ன நடந்தது" என்று தெரிய வாய்ப்புள்ளது. ஒரு வேலை லக்ஷ்மிக்கு அது நேர்ந்து இருக்கலாம். நீங்கள், ஒரு வாரம் கழித்து என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

தூங்கி கொண்டு இருந்த லக்ஷ்மிக்கு.... கனவுலகில்.. மீண்டும் சுப்பிரமணி வர, அதை தொடர்ந்து.... பாடல் சத்தம்! ஊட்டி பனி... மேக மூட்டம்...பாடல் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வர, இப்போது மேகம் எல்லாம் விலகி அவளின் எதிரில்... சீனு... பழைய சீனு... "காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்.. கண்மணி உன்னை நான் .."என்று பாடி கொண்டே அவள் கையை பிடித்தான்..

விழித்து கொண்டாள்....  இவனை எனக்கு நன்றாக தெரியும்... யார் இவன்.?.என்று நினைத்து கொண்டே, சீனுவின் முகத்தை அருகில் இருந்த ஒரு தாளில் வரைந்துகொண்டாள்...யார் இவன்? நான் அறியாமலே என்னை ஆட்கொள்ளும் இவன் யார் என்ற கேள்வி..

அங்கே ஊட்டியில்...அந்த விறகு கடையில், அந்த தாடிகாரனும்... (முன்பு தலைமை அசிரியர், தற்போது மன நோயாளியான) சீனுவும்,

டேய்..ராமா.. அண்ணனுக்கு அந்த தீப்பெட்டி எடுத்து கொடு...

அட்ரா ராமா,... அட்ரா ராமா.. இந்தா தீப்பெட்டி.

டேய் ராமா... ஒரு பல்டி அடித்து கொண்டே போய் அந்த டீ கடையில் இருந்து அண்ணனுக்கு ஒரு டீ!

அட்ரா ராமா, அட்ரா ராமா.. அண்ணனுக்கு ஒரு டீ...

என்று சீனு ஓட... அருகில் இருந்த "சுப்பிரமணி" வாலை ஆட்டி கொண்டு நின்றது...

தொடர்ச்சியை படிக்க இங்கே சொடுக்கவும்.

http://www.visuawesome.com/

9 கருத்துகள்:

  1. எனக்கு என்னவோ கண்ணே கலை மானே மறந்து போய் "பொன்மேனி உருகுதே" தான் நியாபகம் வருது ,
    மறைந்த பாலு மகேந்திராவுக்கு அஞ்சலியாக வரும் தொடருக்கு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணே....முன்பு ஒரு காலத்திலே, பாட்ட கேட்டவுடன் "முருங்கை மரம்" தான் எனக்கும் நினைவிற்கு வந்தது.. வருகைக்கு நன்றி...

      நீக்கு
  2. உண்மையிலேயே இரண்டாம் பாகமாய் எடுக்கலாம்
    இயக்குநருக்கு இதைவிட சிறப்பா யாராலும் அஞ்சலி செலுத்த இயலாது

    பதிலளிநீக்கு
  3. அருமையான தொடர்ச்சியாக இருக்கிறதே !! தொடருங்கள் சூப்பர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த படத்தை முதல் முதலாக பார்த்தவுடனே எனக்குள் வந்த சிந்தனை இது. எழுதுவதற்கு பல வருடங்கள் ஆகிவிட்டது. வருகைக்கு நன்றி. தொடர்ந்து படித்து தம் கருத்தை பின்னோட்டத்தில் அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

      நீக்கு
  4. Very nice, but Seenu's prognosis seesm depressing. Please give him some hope. Thamizh font ezhuda theriyala :) Nalini (also dont know how to respond as myself :) )

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...