Sunday, August 10, 2014

அழகிகள்-கிரிக்கெட்-கடன்-தூக்கு....

ரிங்... ரிங்.. ரிங்கியது.. .என் தொலை பேசி...

ஹலோ... விசு பேசறேன்...

விசு... தண்டபாணி பேசறேன்..

என்ன தண்டம், ஞாயிறு மதியம் பொதுவா ஒரு பூனை தூக்கம்  போடுவியே , தீடீரின்னு என்ன அத்தி பூத்த போல் இந்த நேரத்தில் போன்?வாழ்க்கை போற வேகத்தில் மனுஷனனுக்கு இராத்திரிலேயே தூக்கம் வர மாட்டேங்குது, மதியதில எங்க தூங்குறது?

சரி, விஷயத்திற்கு வா தண்டம், என்ன விஷயம்?

ஒன்னும் இல்ல விசு..

சரி அப்புறம் பாக்கலாம்.

அட என்ன விசு, ஒன்னும் இல்லன்னு சொன்னா உடனே சுடுதண்ணி காலில் பட்டது மாதிரி ஓடுற? வெயிட் எ நிமிட்... விசு..

சரி சொல்லு..

வாத்தியாரே... இந்தியாவில் "வங்கி கடன்" பத்தி ஏதாவது தெரியுமா?

தண்டம், நான் ஊரே விட்டு 25 வருஷம் ஆகிவிட்டது. நான் அங்கே இருக்கும் போது, வங்கி கடன் எல்லாம், "மாமன் -மச்சானுக்கு" தான், இப்ப தான் "மோடி" தலைமையில் புது மாடல் எதோ வந்து இருக்காமே, அதனால் நிலைமை எப்படின்னு தெரியல, அது சரி, நீதான் பெரிய பணக்காரன் ஆச்சே.. உனக்கு எதுக்கு தண்டம், கடன்?

என்ன விசு , ஒரு இந்திய கணக்கு பிள்ளை போல பேச கத்துக்க...

என்ன சொல்ல வரன்னு புரியல தண்டம்.

இல்ல விசு, இந்தியாவில் என்னிக்கு ஏழைகளும், விவசாயிகளும் மற்ற நொந்து போனவார்களும் கடன் வாங்கினாங்க...அவங்கதான் "மானஸ்தன்கள்" ஆச்சே. அப்படியே அவங்க கடன் கேட்டாலும் எந்த வங்கி தந்துச்சி?. வங்கி கடன் என்பதே நம்ம ஊரில் பணக்காரங்களுக்கு தானே.

அதுவும் சரி தண்டம். சரி, உனக்கு எதுக்கு கடன்?

திரும்பவும், திரும்பவும் கடன் என்று சொல்லாதே, வங்கி நமக்கு தரும் அன்பளிப்புன்னு சொல்லு, வாத்தியாரே.

சரி தண்டம், இப்ப தீடீர்ன்னு உனக்கு ஏன் இந்த அன்பளிப்பு மேல இவ்வளவு அக்கறை?

இல்ல விசு, நேத்து தான் பேப்பரில் படித்தேன். நம்ப "விஜய்மாலிய" கிட்டதட்ட 1500 கோடி கடன் வாங்கிட்டு வங்கிக்கு "ஸ்வாஹா" ன்னு ஒரு சிம்பிள் பதில் சொன்னாராமே..அது எப்படி?

தண்டம்... ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு.

"If you borrow a million from a Bank, you owe that to the Bank. If you borrow billions from a Bank, you own that Bank". 

இந்த பொன்னான வார்த்தைகளை நல்லா புரிஞ்சு வைச்சி இருக்கார், அதனால் என்ன வேண்டும் என்றாலும் செய்வார்.

சரி விசு.. இந்தியாவில் பாதி பேர் குடிச்சி குட்டி சுவராக இருக்க காரணமே இவரின் "United Breweries" அல்லவா? பீர், பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா மட்டும் இல்லாமல் அதுல கலந்து அடிப்பதற்கு சோடாவும் கூட வித்துட்டு இப்ப நட்டம்ன்னு சொன்ன வங்கி எப்படி நம்புவாங்க. அந்த நிறுவனத்தில் இல்லாத பணமே இல்லை. அப்புறம் எப்படி இவரு இந்த கடனை திருப்பி கொடுக்க பணமும் வசதியும் இல்ல என்று நிரூபித்தார்?

ஐயோ தண்டம், இந்த நிரூபிக்கிறது எல்லாம் 5000 ருபாய் கடன் வாங்கின விவசாயிக்கும், சம்பளம் ஒருநாள் தாமதமா வந்ததாலே கிரிடிட் கார்ட் பில்லை தாமதமா அனுப்பினவனுக்கும் தான். இது எல்லாம், ஒரு "அலிபாபா  40 திருடர்கள்" போல் கதை. இவர் இந்த கடனை அவருடைய "Kingfisher Airlines" க்கு தான் வாங்கினார்.  அந்த நிறுவனத்தில் தான் பணம் இல்லன்னு இந்த விமான போக்குவரத்து நிறுவனம் "திவாலாகி விட்டதுன்னு" மஞ்சள் நோடிஸ் அனுப்பிட்டார், அம்புடுதேன்.

புரியில விசு, ரெண்டு நிறுவனமும் இவருது தானே. அப்புறம் எப்படி இது சாத்தியம்?

அட பாவி, விட்டால் ஒரு வேளை இந்த பணத்தில் தான் "Banglore Royal Challengers" வாங்கி இருப்பாருன்னு சொல்லுவ போல இருக்கே?

இது ஏன்னா விசு? புது கதையா இருக்கு? "Bangalore Royal Challengers" இந்த குடும்பத்தை சேர்ந்ததா? எந்த புத்தில் எந்த பாம்போ?

இது எல்லாம் ஒரு "பஞ்ச தந்திரம்", தண்டம். எப்படின்னு சொல்லுறேன் விவரமா கேட்டுக்க?

தலை சுத்துது விசு.. இரு, கொஞ்சம் உட்காந்து பேசுறேன். சரி, இப்ப சொல்லு.

இத பாரு தண்டம். இந்த குடி - கிரிக்கெட் போல விஷயங்கள் எல்லாம் நம்ம ஊரில் ரொம்ப சுலபமாக பணத்தை பெற்று தரும். இந்த தொழிலில் இருப்பவர்கள் நட்டம் அடைய வாய்ப்பே இல்லை. இது எல்லாம் வரவு கணக்கு. அதினால் இது எல்லாத்தையும்  தனி தனி நிறுவனம் என்று "மனைவி-பிள்ளை- பேரன்-பேத்தி- ஏன் வண்டி ஓட்டுனர்" அப்படின்னு மத்தவங்க பேருல ஆரம்பிச்சி விடுவாங்க.இது மூலமா வருவது எல்லாம் வரவு. இந்த நிறுவனத்திற்கு ஆகிற செலவை எல்லாம் வேற ஒரு நட்டத்தில் ஓடுற நிறுவனத்தில் காட்டுவாங்க. அம்புட்டுதான்.

அட பாவிங்களே.. சரி விசு, இவங்கள மனசாட்சி ஒன்னும் உறுத்தாதா?

அட போ தண்டம், 5000 ருபாய் கடன் வாங்கின விவசாயி, அதை கட்ட முடியிலேன்னு தூக்கு போட்டு தொங்கினத கேள்வி பட்டு இருக்க? என்றைக்காவது பணக்காரன் ஒருத்தன் இந்த மாதிரி மானஸ்தன்  மாதிரி நடந்து இருக்கானு கேள்வி பட்டு இருக்கியா?

அதுவும் சரி தான் விசு.

அவன் நாக்கு தொங்குற அளவுக்கு கழுத்தில் கயிற மாட்டி கொண்டு தொங்குவான். இவன் நாக்கை தொங்க போட்டுகொண்டு, மாடல் அழகிகளோடு கிரிக்கெட் மைதானத்தில் போட்டோவிற்கு போஸ் கொடுத்துட்டு நிற்பான்.  அவ்வளவு  தான் வித்தியாசம். சரி, உனக்கு எவ்வளவு அன்பளிப்பு வேணும்னு எதிர் பாக்குற?

ஐயோ, வேண்டாம் விடு, விசு... இதில் இவ்வளவு அநியாயம் நடக்குதுன்னு தெரியாம பேசிட்டேன். நம்ப நாட்டை ஆண்டவன் தான் காப்பாத்து வேண்டும்.

சரி விசு... ஒரு விஷயம் கேட்க்க வேண்டும், கோச்சிக்க மாட்டியே..

தண்டம்... இந்த கோச்சிக்க மாடியேன்னு கேட்கும் போதே.. கோச்சிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரியுது இல்ல, பின்ன ஏன் கேட்கனும். சரி கேளு?

இவ்வளவு விவரமா இந்த விஷயம் எல்லாம் விலாவாரியா சொல்லுறியே.. நீ ஏதாவது அன்பளிப்பு வாங்கி இருக்கியா?

போடாங்க....

3 comments:

 1. எத்தனை கோடி கடன்
  இதை யார் வசூலிக்கப் போகிறார்கள்

  ReplyDelete
 2. உண்மையை புட்டு புட்டு வைச்சிருக்கிங்க!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி

   Delete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...