Thursday, August 14, 2014

"வெள்ளையனே வெளியேறு" ல் இருந்து "வெள்ளையனே சற்று வெள்ளி இரு" வரை.

"வெள்ளையனே வெளியேறு" ல் இருந்து "வெள்ளையனே சற்று வெள்ளி இரு" வர

என் பெயர் சுதந்திரம்,எனக்கு வயது 68!

1947ல் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நள்ளிரவில் நான் பிறந்த அன்று நாடே கொண்டாடியது. இருக்காத பின்னே? 9 மாதம் காத்து பிறக்கும் மழலைக்கே குதுகளிக்கும் நாம், 347 வருடங்கள் காக்க வைத்து விட்டு பிறந்தேன் அல்லவா? அந்த நள்ளிரவு நான் பிறக்கையிலே கொடி ஏத்தி என்னை வரவேற்றார்கள். 68 வருடம் கழித்து சொல்கிறேன், அதற்க்கு பதிலாக என்னை " கொள்ளி பால்" வைத்து கொன்று இருக்கலாம்,.
நான் மட்டும் அல்ல, நான் பிறந்த அன்று என்னுடன் மற்றும் பல குழந்தைகள் பிறந்தனர். என் பெயரோ சுதந்திரம், அது போல் மற்ற குழந்தைகளுக்கும்  ஊழல், பேராசை, போட்டி, பொறாமை,சுய நலம், மூடநம்பிக்கை, தேச துரோகம், நம்பிக்கை துரோகம்  என்றுபெயர் வைத்தார்கள்.

ஒரு வருடம் ஆகியது, நான் இன்னும் தவழ கூட ஆரம்பிக்கவில்லை, ஆனால் இவர்களோ ஓட ஆடம்பித்து விட்டார்கள். மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள். "அவர் எல்லாம் சரி ஆகிவிடும்" இன்னும் ஒரு வருடம் காத்திருப்போம் என்றார்கள்.

மற்றொரு வருடம் முடிந்தது, இன்னும் நான் படுக்கையிலே, எனக்கு பேச்சும் வரவில்லை, அனால் மற்றவர்களோ பாடே ஆரம்பித்துவிட்டார்கள். அழுதே போய்விட்டேன்.

மீண்டும் மருத்துவரிடம் அழைத்து சென்றனர், அவர் இந்த முறை, பேச தானே முடியவில்லை, காது நன்றாக கேட்க்கிறதே என்று சந்தோஷ படுங்கள் என்றார்.
முட்டாள் மருத்துவர், காது கேட்காத காரணத்தில் தானே எனக்கு பேச்சு வரவில்லை என்று என் மனதிலே நொந்தேன்.

5 வருடங்கள் ஆனது. இன்னும் படுக்கை, கை கால் விளங்காது என்று மற்றவர்கள் பேசியது, என் கண்ணுக்கு புரிந்தது. அட பாவி, இந்த பார்வையை மட்டும் ஏன் தந்தாய், இந்த மற்றவர்களின் வளர்ச்சியை பார்த்து ரசிக்கவா என்று அழுதேன்
.
10 வருடம் கழிந்தது. இன்னும் படுக்கையிலே... என்னை சுற்றி புழு, பூச்சிகள், என் நிலைமையை பார்த்து அருவருப்பு அடையாதவர்கள் யாரும் இல்லை. அதே நேரத்தில், மற்ற பிள்ளைகள், நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்வதை கண்டேன், நொந்தேன்.

இருபது வருடங்கள் ஆனது, மற்றவர்கள் எல்லாருக்கும் பெண் பேசி மனம் முடிக்கையில், என்னை பார்த்து, இது இன்னும் சாவல? என்ற ஒரே கேள்வி, எல்லோர் மனதிலும்.

30 வருடங்கள் ஆகியது, என் கூட பிறந்தவர்கள் எல்லாரும், மனைவி (கள்) குழந்தைகளோடு சுற்றி ஆடி திரியும் போது, என் இமைகள் என்னை அறியாமலே ஈரமாகின.

40 வருடம் ஆகியது, 50 வருடம் ஆகியது... 60 வருடம் ஆகியது... பல மருத்துவர்களிடம் சென்றேன், ஒருவனும் மருந்து அளிக்க வில்லை. எல்லாம் காலபோக்கில் சரி ஆகிவிடும் என்றார்கள்.

இன்று என் 68வது பிறந்த நாள். யாரோ புதிய ஒரு மருத்துவர், "மோடி" என்று பெயர், இவர் உன்னை கண்டிப்பாக குணமாக்குவார் என்று கை அசைக்க,  ஒரு நப்பாசையில் என் படுக்கையில் இருக்கிறேன்.  பார்க்கலாம், இவராவது என்னை குணமாக்குவாரா  என்று.

இதன் நடுவில், வீட்டின் வெளியே கொடியை ஏற்ற வேண்டும் சொல்லி, இந்த சனியன் இங்கே என் உள்ளது என்று, குப்பை தொட்டியில் என்னை வீச உருட்டி கொண்டு போகிறார்கள்.

ஏன் என்னை பெற்றார்கள்? வேண்டாத பிள்ளையை பெற்று கொள்ள வேண்டும்.  இல்லை என்று பலர் இருக்க இங்கு வந்து ஏன் பிறக்க வேண்டும்.

"வந்தே மாதரம்".

பின் குறிப்பு :  26-11 மும்பை நகர தீவிரவாதம் அன்று பார்த்த காட்சி நினைவிற்கு வருகிறது. தீவிரவாதி கையில் AK 47, நம் போலிஸ் கையில் லத்தி என்று அழைக்க படும் குச்சி.  புரிந்தால் சரி.

நீங்கள் கேட்பது புரிகிறது. தாய்மண்ணை விட்டு ஓடியவனுக்கு இப்ப என்ன அக்கறை. வெள்ளையனே வெளியேறு என்பது அந்த காலம். அவன் நாட்டிலேயே வந்த அமர்ந்து வெள்ளையனே சற்று வெளியே இரு என்பது இந்த காலம்.

http://www.visuawesome.com/

3 comments:

 1. ஒவ்வொரு மனிதனும் மாறினால் நாடும் மாறும்! அது சாத்தியப்படாதவரையில் இப்படி சொல்லி அலுத்துக் கொள்ள வேண்டியதுதான்!

  ReplyDelete
  Replies
  1. நெஞ்சு பொறுக்குதிலையே....

   Delete
 2. என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ?

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...