Friday, August 29, 2014

கலிபோர்னியாவில் தண்ணீர் தட்டுபாடு?


கடந்த சில நாட்களாகவே கலிபோர்னியாவில் எங்கே பார்த்தாலும், எதிலே பார்த்தாலும் "தண்ணீரை சேமியுங்கள்", "தண்ணீரை சிக்கனமாக உபயோக படுத்துங்கள்" என்று எல்லார் மனதிலும் படும் படியான எச்சரிக்கைகள். அடடே... வீட்டில்குழாயை எப்போது திறந்தாலும் பாய்ந்து வரும் தண்ணீர், எங்கே பார்த்தாலும் பச்சை பசேல் என்ற புள் வெளிகள், பள்ளத்தாக்குகள், மற்றும் நிறைய ஏரிகள். காய்கறி விளைச்சலில் கலிபோர்னியாவிற்கு நிகர் யாருமே இல்லை. பழ வகைகளா, மற்றவர்கள் பேச்சுக்கே இடமில்லை.

இன்னும் சொல்ல போனால் " California's agricultural abundance includes more than 400 commodities. The state produces nearly half of US-grown fruits, nuts and vegetables. Across the nation, US consumers regularly purchase several crops produced solely in California'"


அமெரிக்காவில் உள்ள பல பெரிய ஏரிகளில் பல ஏரிகள் கலிபோர்னியாவில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.  சில வருடங்களுக்கு முன் "டாஹோ" என்று அழைக்கபடும் ஏரிக்கு சென்று அதன் பரப்பளவை கண்டு பேய் அறைந்தவன்  போல் நின்றேன் ( பேய் அறைந்த கதையை மற்றொரு நாள் கண்டிப்பாக சொல்கிறேன்).


Lake Tahoe 

இவ்வளவு செழிப்பான இடத்திற்கு தண்ணீர் தட்டுபாடா ? சற்று நம்ப மறுத்தேன்.   இந்தியாவின் பஞ்சாப், போல அல்லவா நம்ம கலிபோர்னியா, இங்கே எப்படி இந்த தட்டுபாடு என்று சற்று விசாரிக்க ஆரம்பித்தேன். இதை விசாரிக்கையில் தெரிய வந்தது தான் "வருமுன் காப்போம்- யுக்தி" .

கடந்த சில வருடங்களாக வந்த குறைச்சலான மழையினால் இந்த ஏரிகளில் நீரளவு வற்றி வருகின்றதாம், இப்படியே நிலைமை போனால் இன்னும் சில வருடங்கள் கழித்து     தட்டுபாடு வர நேரிடும் என்று இப்போதே அபாய சங்கு ஊதுகின்றார்கள். எவ்வளவு நல்ல காரியம்.

நம்ம ஊரில் வளரும் போதும், வாழும் போதும், அரசியவாதிகளும் அலுவலர்களும் அதிகாரிகளும்  "ஆறு" என்ற பெயர் கொண்ட அன்னையை "மணல் எடுக்கின்றோம்" என்று சொல்லி மாறி மாறி கற்பழித்ததை பார்த்து வளர்ந்த எனக்கு இது ஒரு பெரு மாற்றம்.

மணல் என்பது ஆற்று அன்னையின் தாலி அல்லவா? அதை எடுத்து அவளை விதவையாக்கி, விதவையும் விட்டு விடமால்  அவள் வெள்ளை சேலையையும் துயில் உரிப்பதை காண்கையில் அந்த ஆற்றில் ஈரம் உள்ளதோ இல்லையோ, நம் கண்ணில் ஈரம் நிச்சயம் உண்டு.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். இங்கே "தண்ணீரை சேமியுங்கள்" என்று சொல்லி  விட்டுஅரசு ஒன்றும் அமைதியாக இருக்காது. தண்ணீரை வீணடிக்கும் பொது மக்களுக்கும் சரி, நிருவனகங்களுக்கும் சரி, பெரிய அபராதம் விதிக்க படும். இந்த விதி முறைகளினால் இங்கே பொதுவாக முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

இது மட்டும் அல்லாமல் வீ ட்டிற்கு வெளியே உள்ள புள் தரையை நீக்கிவிட்டு அங்கே மரத்தை நட்டால் அதற்க்கு வெகுமதியாக ஓவ்வொரு Square feetர்க்கும் அரசு 2$ தருகிறது. அடுத்த இரண்டு வருடங்களில் வருணபகவான் கருணையிட்டால் இந்த பிரச்சனை குறையும்.

கலிபோர்னியா வாழ் மக்களுக்கு ஒரு அறிவிப்பு-எச்சரிக்கை. இங்கே சில நாட்களாக போய் கொண்டு இருக்கும் "பனிகட்டி வாலி பந்தயம்" (Ice Bucket Challenge) தவிருங்கள். இதை நீங்கள் செய்வதை பார்த்தால் காவல் துறை அதிகாரிகள் நிர்வசாரமாக நீரை வீணாக்கியதால்500$ அபராதம் விதிக்க நேரிடும். அப்படியே தாங்கள் அந்த வேலையை செய்து  இருந்தாலும் அதை பெருமையாக சமூக வலையில் எதிலும் போட்டு விடாதீர்கள். நீங்கள் இந்த வேலையை செய்தது கலிபோர்னியாவில்  என்று நிருபனம்  செய்து உங்களுக்கு அந்த அபராதம் வழங்க படும்.

பின் குறிப்பு: இதை படித்த பின்னும் யாரவது என் பெயரை இந்த போட்டிக்கு சிபாரிசு செய்தால் "மவனே, உனக்கு நாளைக்கு பால் தான்"

http://www.visuawesome.com/


14 comments:

 1. அரசாங்கம் (20% குறைப்பு, 30% குறைப்பு என) எவ்வளவோ முயற்சி எடுத்தாலும் , சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கலிபோர்னியா அதிகம் தண்ணீர் செலவு செய்து உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. பூதம் ஐயா... ஏற்கனவே பயத்தில் இருக்கேன்... வெந்த புண்ணில் வேல் எதறுக்கு. வருக்கைக்கும் வார்த்தைக்கும் நன்றி.

   Delete
 2. வணக்கம்
  சொல்லிய தகவலை அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. கலிபோர்சினா எங்கே? நம்ம ஊர் எங்கே?

  ReplyDelete
 4. நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க....ஆனா எழுத்துப் பிழைகள் தான் நிறைய...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி எழில் அவர்களே. என் எழுத்தில் பிழைகள் நிறைய உண்டு என்று அறிவேன். நீங்கள் சுட்டிக்காட்டியவுடன் மீண்டும் பார்த்து திருத்தினேன். இன்னும் பிழைகள் இருக்கும். ஆனாலும், தமிழ் எழுதி படிப்பதை கிட்ட தட்ட 25 வருடங்கள் கழித்து செய்வதால் வரும் சங்கடங்கள் தான் இவை. பொறுமை காத்தருள வேண்டுகிறேன், அதே நேரத்தில் தவறுகளை சுட்டி காட்டவும் தயங்காதீர்க என்று சொல்லி கொள்கிறேன்.

   Delete
 5. கலிபோரினியா அரசாங்கம் முயற்சி செய்தாலும் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கலிபோர்னியா அதிகம் தண்ணீர் செலவு செய்து உள்ளது என்று சதுக்க பூதம் சொல்வதை கடந்த வார செய்திகளில் படித்தேன். ஆனால் அதற்கு காரணம் நீங்கள்தான் என்று தகவல் கசிந்துள்ளது இந்த தகவல் உண்மையா என்ன?


  சாரே பேசாம ஈஸ்ட் கோஸ்ட் பக்கம் வந்துடுங்க.... வேலையை பத்தி கவலைப்படாதீங்க உங்க நண்பர் அதுதாங்க பரதேசி என பெயர் வைத்திருக்கும் மில்லியனரின் கணக்கு வழக்குகளை பார்த்தால் அதற்கு அவர் தரும் சம்பளத்தை வாங்கி படுத்து கொண்டே ஜீவன் நடத்தலாம்

  ReplyDelete
  Replies
  1. ஈஸ்ட் கோஸ்ட் வேண்டாம் நண்பா. பனி என்றாலே சனி என்று கேட்கின்றது.
   மதுரை தமிழா, நான் ஒரு பொட்டி கடை கணக்கு பிள்ளை. குண்டு சட்டியில் குதிரை ஒட்டிக்கொண்டு இருக்கின்றேன். பரதேசி அண்ணன் கணக்கை பார்க்கும் அளவிற்கு நமக்கு தகுதியும் இல்லை அறிவும் இல்லை. அதற்க்கு எல்லாம் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

   Delete
 6. நம்ம வீட்டுக்கு வந்தா தண்ணிப் பஞ்சமே இல்லை இரண்டு வகையான தண்ணிக்கும் பஞ்சம் இல்லை. குளிக்க குடிக்க

  ReplyDelete
 7. தண்ணீர் பஞ்சம் அங்குமா..?

  ReplyDelete
 8. பேசாம இந்த ஐஸ் பக்கெட் போட்டியெல்லாம் ஏரிக்கு பக்கத்தில நடத்தி வீணாகிற தண்ணியெல்லாம் அப்பிடியே ஏரிக்கு திருப்பி விட்டா போதுமே. போட்டிக்கு போட்டியும் ஆச்சு. தண்ணிக்கு தண்ணியும் ஆச்சு. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா....... (ஐயோ அடிக்காதீங்க..... அடிக்காதீங்க)

  ReplyDelete
 9. நம்மூரிலும் தண்ணீர் தட்டுப்பாடு தான்

  ReplyDelete
 10. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.!

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...