வியாழன், 14 ஆகஸ்ட், 2014

"பாரதி ராஜா - இளைய ராஜா" - ஒரு மாஸ் காம்பினேஷன்



என் இனிய தமிழ் மக்களே என்ற கம்பீரமான குரலை அறியாத தமிழன் இல்லை என்று சொன்னால் அது மிகையாகது. 16 வயதினிலே படத்தை பார்த்தவுடன் மனத்தில் வந்த முதல் எண்ணம். அடேங்கப்பா? தமிழ் சினிமா உலகிற்கு ஓர் "தங்க புதையல் வேட்டை தான்" .



புது புது பெயர்கள், சில அறிமுகங்கள், சில வளரும் "எதிர்கால நாயகர்கள்". இவர்கள் எல்லோரும் எப்படி ஒன்றாக சேர்ந்தார்கள்? என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுந்தது.

கிராமத்து மண்ணில் பிறந்து, வளர்ந்து, சினிமாதான் என் பேச்சு, மூச்சு என்று "கருமமே கண் ஆயிரம்" என்று வளர்ந்த பாரதி ராஜாவின் முதல் படம்.  அவரின் ராசி, அவர் கூடவே அதே மூச்சில் வளர்ந்த "இசை ஞானி இளையராஜா" வின் இசை. உடனே புரிந்து கொண்டேன். அடடே, இது கிராமத்து பின்னணி கதை அல்லவா? அதனால் தான் இவர்களால் இப்படி ஓர் சகாப்தத்தை செய்ய முடிந்தது என்று சொல்லி கொண்டேன்.

இந்த இடத்தில இன்னொரு கலைஞன் மறைந்த "கலைமணி" யை பற்றி குறிப்பிட்டு ஆகா வேண்டும். "இது எப்படி இருக்கு"? என்ற ஒரு பஞ்ச் டைலாக்கை உருவாக்கியவர் அல்லவோ அவர்.  வருடங்கள் பல ஆகினும், இந்த "பஞ்ச்" லைனை  அடிக்க ஏதாவது வந்ததா? வர தான் முடியுமா?
படம் பார்த்ததில் இருந்து அருகில் இருந்த ரயில் நிலையம் சென்று, மயிலோடு சேர்ந்து நானும் அல்லவா, சப்பாணி என்றாவது வருவான் என்று காத்து கொண்டு இருந்தேன். வருடங்கள் பல ஆகினும் இன்று கூட ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருக்கையில் சப்பாணி எண்ணம் தானே நினைவிற்கு வருகிறது.

வளரும் நடிகர்களான "கமல்- ரஜினி-ஸ்ரீதேவி" தெரியா முகமாக அறிமுகமான "கவுண்ட மணி" அறிமுக இயக்குனர் "பாரதி ராஜா", வளரும் ஞானி "இளைய ராஜா" நாளைய இயக்குனர் "பாக்யராஜ்".  என்ன ஒரு அணிவகுப்பு.
இவர்கள் எல்லாருக்கும் பொதுவாக இருந்தது அந்த "கிராமத்து மண்வாசனை". இந்த பொது காரணத்தால் தான் இவர்கள் இப்படியான ஒரு படம் கொடுக்க முடிந்தது என்று அன்று நினைத்தேன்.

மாதங்கள் கழிந்தது. "கமல்-ரஜினி-ஸ்ரீதேவி" வளர்ந்து விட்டனர். "பாரதி ராஜா - இளையராஜா"வின் அடுத்த படைப்பு.. "கிழக்கே போகும் ரயில்".
என் இனிய தமிழ் மக்களே என்று அவர் கை கூப்புகையில், அடடே, சப்பாணி சென்ற ரயிலை இன்னும் மறக்க முடியவில்லை அதற்குள் அடுத்த ரயிலா? என்று நிமிர்ந்து அமர்ந்தேன்.

எல்லாம் புது முகங்கள். சுதாகர்- ராதிகா (ராதிகாவை நல்ல பொருத்தமே இல்லை என்று அன்று சொல்லி வந்த உதவி இயக்குனர் பாக்யராஜ், அதே ராதிகாவை பின்னாட்களில் வைத்து சில படங்கள் பண்ணியதில் இருந்தே தெரியும், பாரதி ராஜாவின் காதாநாயகிகளின் தேர்வு எப்படி என்று).  மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படம். மீண்டும் அதே எண்ணம். இவர்கள் அனைவரும் கிராமத்து மின்னல்கள், அதனால் தான் இப்படி செய்ய முடிகிறது என்று.

அடுத்து நான் சொல்ல வருவது தான் என்னை வியக்க வைத்த காரியம். "சிகப்பு ரோஜாக்கள்" ஒரு பட்டணத்து பணக்கார பின்னணியில் அமைந்த படம். இது எப்படி சாத்தியம் ஆகும்? கிராமத்திலேயே இருந்து பிறந்து வளர்ந்த இந்த கலைஞ்ஞர்களால்  எப்படி ஒரு பட்டணத்து பின்னணி படம் தர இயலும்?
படத்தை பார்த்து அதிர்ந்தே விட்டேன். என்ன ஒரு டைரக்சன், திரை கதை, பாடல்கள், பின்னணி இசை. "நினைவோ ஒரு பறவை" என்ன ஒரு  அற்புதமான பாடல். கமலால் இவ்வளவு அழகாக பாட முடியும் என்று இளையராஜாவிற்கு யார் சொன்னது?

அந்த முதல் காட்சியில்... சிறைசாலையில் கைதிகளுக்கு இனிப்பு அளித்து விட்டு " நான் வரட்டா" என்று கமல் கேட்க்கையில், இது சிறைசாலை, நான் வரட்டா என்று கேட்காதீர்கள்"என்று அதிகரி சொல்ல, "இல்லை கண்டிப்பாக வருவேன்" என்று கமல் சொல்வாரே, அந்த காட்சியை யாரால் மறக்க இயல முடியும்.

கருப்பு பூனையை கண்டவுடன் என்னை நடுங்க செய்த படமாயிற்றே... மழை பெய்தவுடன், வீட்டின் பின்புற தோட்டத்தை பார்க்க பயந்தேனே...என்ன ஒரு அற்புதம்.

சரி, விஷயத்திற்கு வருவோம். கிராமத்து பின்னணியில் வளர்ந்த இவர்கள் இப்படியொரு படம் கொடுக்க காரணம் என்ன? திறமை ஒன்று மட்டுமே. "எங்க அப்பா, தயாரிப்பாளர், எங்க மாமா டைரக்டர், எங்க தாத்தா பெரிய கதாநாயகன்" என்று எல்லாம் இல்லாத காலம்.

அந்த திறைமையும் - அந்த மாதிரியான படங்களும் மீண்டும் வருமா? கோவணத்தில் (சப்பாணி)  சுற்றி கொண்டு இருந்தவனை கோட் சூட்டில் பார்க்க முடியுமா?

பின் குறிப்பு : தயவு செய்து "வரும் ஆனா வராது" என்று சொல்லாதீர்கள்.

5 கருத்துகள்:

  1. சினிமாவுக்கு புதிய இயக்குனர்கள், புதிய நடிகர்கள் வந்து கொண்டேதான் இருப்பார்கள். திறமையானவர்கள் மட்டுமே நிலைத்து நிற்பார்கள்.

    பதிலளிநீக்கு
  2. உண்மை சார் அந்த படம் பார்த்த போது (டிவியில் தான் ) அந்த பூனையும் அந்த வீட்டுத் தோட்டத்தில் கையும் மிகவும் பயமுறுத்தியிருந்தது அந்த சின்ன வயசில் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த படத்த பாத்த பின் ரெண்டு நாளைக்கு கருப்பு பூனை எங்க போனாலும் நான் வீட்டுக்கு ஓடி வந்து விடுவேன். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. அவிங்க அல்லாரும் அம்மூருதாங்கோ தம்பியோவ்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...