திங்கள், 28 ஜூலை, 2014

ஒரு பைசா வரி இல்லாமல் வெளிநாட்டு கார் இறக்குமதி... எப்படி?

மிஸ்டர் விசு. 

ஹொவ் ஆர் யு ? பைன், தேந்க் யு வா?

 என்று அவரே கேள்வி கேட்டு அவரே பதிலும் சொல்லி கொண்டே என் அலுவலகத்தில் நுழைந்தார்  என்னுடன் பணி புரியும்  என் அருமை நண்பன் "இளந்தோப்பு கிழிஞ்செயில் மத்தாய் அமநிகுட்டி குஞ்சு குஞ்சு"" என்று பெயர் கொண்ட நல்லதோர் "பாலக்காட்டு மாதவன்"(என்ன பெயர் வித்தியாசமாய் இருக்கேன்னு பாக்கறீங்களா, அந்த கதையை இங்க படியுங்கள்).


சொல்லுங்க மிஸ்டர் மத்தாய். நீங்க எப்படி இருக்கீங்க.

நல்லா இருக்கோம் விசு. எனக்கு ஒரு உதவி வேணுமே.

செய்யலாமே, என்னால் முடிந்தால். என்ன சொல்லுங்க.

நாளைக்கு புதுசா ஒரு டொயோடா கேம்ரி வாங்குறேன். அதை எடுக்கணும். கொஞ்சம் என்னை அந்த ஷோ ரூம் வரை டிராப் பண்ண முடியுமா?

சரி மிஸ்டர். மத்தாய். கண்டிப்பா செய்யலாம்.

அடுத்த நாள் காலையில்.. மிஸ்டர் அந்த ஷோ ரூம் செல்லும் வழியில், 

மிஸ்டர் மத்தாய். இது இரு நல்ல முடிவு. நானே சொல்லனும்னு இருந்தேன். உங்களுடைய அந்த ஹுண்டாய் வண்டி ரொம்ப பழயதா தெரியுது. இந்த வெயிலில் சில நேரங்களில் நீங்கள் வேர்த்து விருவிருக்க உள்ள வரும் போது உங்க வண்டியில் ஏசி  கூட வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

எஸ், மிஸ்டர் விசு. அது ஒரு 15 வருஷம் பழைய கார்தான். ஓடுற வரை ஓடட்டுமே நான் வைச்சி இருக்கேன்.

ஷோ ரூமில் போய் புதிய வண்டிய நண்பர் எடுத்தவுடன் நான் என் வீட்டுக்கு  கிளம்பினேன்.

அடுத்த நாள் காலை ஆபிசில்:

என்ன மிஸ்டர் மத்தாய், மீண்டும் வேர்த்து கொட்டி கொண்டே வரீங்க. புது வண்டியில் ஏசி  எப்படி போடணும்னு தெரியவில்லையா?

மிஸ்டர் விசு.. நான் அந்த வண்டிய வீட்டில வச்சிட்டேன். இன்னும் ஒரு நாலு வருஷத்துக்கு இந்த ஹுண்டாய் தான் ஓட்டுவேன்.

அதுக்கு ஏன் மிஸ்டர் மத்தாய் இந்த புது வண்டி வாங்கினீர்கள்.

அது ஒரு "லாங் டெர்ம் பிளான்" மிஸ்டர் விசு. இந்த புது வண்டிய 4 வருஷம் வீட்டில் கவர் போட்டு புதுசா வைப்பேன். நாலு வருஷம் கழித்து இந்தியாவிற்கு ஒரேடியா போயிடலாம்ன்னு ஒரு பிளான். அப்ப நாலு வருஷ பழைய வண்டின்னா வரி கிடையாது. இந்த பிளான் ஓகே ஆச்சினா, எனக்கு புது டொயோடா.. வரி இல்லாமல்.அதுனால தான் இப்ப வாங்கினேன்.

மிஸ்டர் மத்தாய்.. "பைவ் இயர் பிளான்" என்று இந்தியாவில் கேள்வி பட்டு இருக்கேன். இது" நாலு வருஷ பிளான்"  புதுசா இருக்கு.. ஆல் தி பெஸ்ட்.

நான்கு வருடம் கழித்து...

என்ன மிஸ்டர் மத்தாய்..20 வருஷம் இங்க குப்பையை கொட்டிட்டு கடைசியா இந்தியா போக தயார் ஆகி விட்டீர்கள் போல இருக்கு..

எஸ் மிஸ்டர் விசு... இப்ப இந்த ஹுண்டாய் காரை விக்க வேண்டும், அதுக்குதான் நல்ல ஒரு ஆளை தேடிக்கொண்டு இருக்கேன்.

அந்த ஹுண்டாய் காரையா? ஆல் தி பெஸ்ட். சரி.. கார்ன்னு சொன்னவுடன் தான் நினைவிற்கு வருது. அந்த டோயோடாவ இந்தியாவிற்கு அனுப்பி விட்டீர்களா?... வரி எதுவும் இருக்காதே..

இல்ல மிஸ்டர் விசு.. இப்ப இங்க இருந்து "போர்டி"ற்கு தான் போக போகிறேன். அதோ எதிரில் நிக்கிதே அது தான் அந்த கார்.

மிஸ்டர் மத்தாய். நம்பவே முடியில்ல. நாலு வருஷ காரா அது? அப்படியே புதுசா இருக்கே..

மிஸ்டர் விசு, மொத்தமே 250 கிலோ மீட்டர் தான் ஓடி இருக்கும் விசு. 6  மாசத்திற்கு ஒருமுறை சர்வீஸ் எடுத்துன்னு போய் பண்ணிட்டு வந்து வீட்டில் வைச்சிடுவேன்.  இன்னும் ஒரு 15 நாட்களில் இந்தியாவில் இருக்கும். நான் இந்தியா போய் சேரும் போது இது அங்கே இருக்கும்.

செம்ம பிளான் மிஸ்டர் மத்தாய்.. செம பிளான்.. ஆல் தி பெஸ்ட்.

அன்று இரவு...

மிஸ்டர் விசு... கொஞ்சம் அவசரமா "போர்ட்" வரைக்கும் வர முடியுமா?

என்ன அவசரம் மிஸ்டர் மத்தாய்?
வாங்க சொல்லுறேன்.

ஒரு 10 நிமிடம் கழித்து..

என்ன ஆச்சி மிஸ்டர் மத்தாய்..?

மிஸ்டர் விசு, இங்கே இந்த வண்டிய ஏற்றுமதி பண்ண வர வழியில் எதிரில் வந்தவனோடு நேருக்கு நேர் மோதி வண்டி "டோட்டல் டேமேஜ்" ஆயிடிச்சி.

சரி, விடுங்க மிஸ்டர் மத்தாய், இன்சுரன்ஸ் எல்லாம் இருக்கு இல்ல..

இன்சுரன்ஸ் இருக்கு விசு, ஆனால் அதுல ஒரு பிரச்சனை.

அதுல என்ன பிரச்சனை மிஸ்டர் மத்தாய்?

இந்த வண்டி 4 வருஷம் பழைய வண்டின்னு கூட்டி கழிச்சு பார்த்து கையிலே அஞ்சோ பத்தோ தான் தருவேன்னு இன்சுரன்ஸ் காரன் சொல்லுறான்.

நீங்க இது மொத்தமே 250 கிலோ மீட்டர் தான் ஓடி இருக்குன்னு சொன்னீங்களா?

சொன்னேன், மிஸ்டர் விசு... அதுக்கு என்னை கேவலமா பாத்துட்டு " அது உன்னுடை முட்டாள் தனம்ன்னு" எனக்கே அறிவுரை சொல்லுறான்.

ரொம்ப சாரி மிஸ்டர்.மாத்தாய், புது கார் வாங்கி அத ஓட்ட கொடுத்து வைக்கலையே...ரொம்ப சாரி...



பின் குறிப்பு ;

இதில் எங்கே தவறு நடந்தது? அருமையானா பிளான் தான் "மிஸ்டர். குஞ்சு குஞ்சு" (மிஸ்டர் மத்தாய் உடைய சொந்த பெயர் குஞ்சு குஞ்சு, அந்த கதையை படிக்க இங்கே சொடுக்கவும்) பண்ணார்.  இது எப்படி மிஸ் ஆச்சி..
Man proposes God disposes.... ah ...

நந்தவனத்தில் ஓர் ஆண்டி.. அவன் நாலாறு மாசாமாய் குயவன வேண்டி......

6 கருத்துகள்:

  1. ஏமாற்றாதே ஏமாறாதே என்று பாடம் சொன்னது கதை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு என்னமோ அவர் யாரையும் ஏமாத்தின மாதிரி தெரியிலே.

      நீக்கு
    2. True. Enakum avaru yemaathina maathiri theriyala..JJ ku vote pottu Mannarkudi kitta yemandha thamizh makkal maadhiri thaan theriyuraar.

      நீக்கு
  2. Its true you can bring a car without import duties, if it was used by you for 3 or 4 years, but I doubt if the customs would be blind enough not to see the mileage!!, if this is not circumventing the rules, then what is?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Tamizhan,

      Yesx, indeed it was circumventing the rules, but i guess he was taking advantage of the loopholes. With regards to your thoughts on customs.... I wouldnt know. He was pretty sure that he got them all nailed.
      BTW, thanks for dropping by and posting your comments.

      நீக்கு
    2. He didnt circumvent rules, he just followed it blindly. There is no tax if the car is 4 years old. He follwed that. There was no rule about mileage.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...