செவ்வாய், 29 ஜூலை, 2014

ரஜினியின் "நல்லவனுக்கு கெட்டவன்"


என்ன விசு.. எதோ பொண்ணு பாக்க போற மாதிரி தயார் ஆகா இவ்வளவு நேரம் எடுக்கறே? சீக்கிரம் கிளம்பு, நம்ப வகுப்பு மாணவர்கள் எல்லாம் அங்கே "டார்லிங் " ஹோடேலில் காத்து கொண்டு இருப்பார்கள்.



ஒரு அஞ்சி நிமிஷம் கொடு சத்தி, இதோ வந்துடேன்.

கல்லூரியில் இளங்கலை, முதுகலை என்று கிட்டத்தட்ட 5 வருடம் பழகிய       நட்ப்பு அல்லவா? அவர்களோடு ஒரு "பார்ட்டி" என்றாலே கொஞ்சம் சந்தோசம் தானே.

சரி சத்தி, நம்ப நண்பன் கோபால் அங்கே இருப்பானா?

கண்டிப்பா இருப்பான்  ? ஏன், கேட்கிற?

அவனுடைய மூக்கு கண்ணாடி ஒன்னு கடன் வாங்கிட்டு தொலைச்சிட்டென், அவன்,  இருந்தா அதே கேட்டா என்ன பண்றது?

அது அவன் கேட்ட பாத்துக்கலாம், நீ வா.

சத்தி, நம்ப கிருஷ்ணன் இருப்பானா? இனிமேல் காலையில் தனபதி "பஸ்"ஸில் உன்னை நான் பார்க்க கூடாதுன்னு சொன்னான். அவன் சொல்லியும் ஒரு ரெண்டு மூணு முறை அவன் ஊரில் இல்லாதபோது அந்த வண்டியில் ஏறிட்டேன். அவன் இருந்தா பிரச்சனை ஆகிவிடுமே.

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, அது சரி அவன் ஏன் உன்னை அந்த பஸ்ஸில் மட்டும் ஏற கூடாதுன்னு சொன்னான்.

அது ஏன்னு யாரு கேட்டாலும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டான். அவங்க அப்பா வேற பெரிய அரசியல்வாதி பார், அதனால அவன் மேல எப்போதுமே கொஞ்சம் பயம் தான். அவன் கூடவே "வெள்ளை வேட்டி-சட்டை"ங்க நிறைய இருக்கும். அதினால அவன் வம்புக்கு போறதில்லை. அந்த பஸ்ஸில் நான் ஏன் வரகூடாதுன்னு என்ற காரணத்தை நீ அவனிடமே கேட்டுக்கோ.

சரி விசு, கிளம்பு.

சத்தி, அங்க நம்ப கிளாஸ் மேட் ராதா? வருவாளா?

விசு என்ன இது? , அவள் - இவள்னு, மரியாதையா அவங்கன்னு சொல்லு.

சரி, அவங்க ராதா வருவாங்களா?

தெரியலே, ஏன்..

ஒன்னும் இல்ல, எவனோ போட்டு கொடுத்ததில் அவங்க அப்பா என் மேல் கடுப்பா இருக்கிறார். என் பொண்ணு போற வழியில் உன் நிழலே படக்கூடாதுன்னு ஒரு முறை திட்டினார். வியாபாரம் மட்டும் தான் வெல்லமண்டி...இனிப்பா இருக்கும், ரொம்ப கசப்பான ஆசாமி அவர். அவர்        திட்டினதில் இருந்து வெல்லம் சாப்பிட்டிறத கூட விட்டுட்டேன்.

அப்படியா சங்கதி, நாங்க எல்லாரும் கூட பேசினோம், நீ ஏன் அவங்க வந்தா மட்டும் அந்த ஏரியாவில் இருந்தே "ஏஸ்கேப்ன்னு", சரி, அவங்க வந்தாலும் , அவரால ஒன்னும் பிரச்சனை வராது, நீ கிளம்பு.

இல்ல சத்தி, ஒருமுறை, அவங்க தெருவில் போகும் போது, அவங்க தம்பிஎன்ன பார்த்துவிட்டான். அப்பா தான் சொன்னாரே, உன் நிழலே இங்க படக்கூடாதுன்னு, எவ்வளவு "தில்" இருந்தா எங்க தெருவில் வந்தாய் என்று சத்தம் போட்டான். நான் அவனிடம்,  "டேய் முட்டாள், என் நிழல் தானடா படகூடதுன்னு சொன்னார். இப்ப தன மாலை 7 மணி ஆச்சே எப்படிடா நிழல் படும்" கிண்டல் பண்ணேன். அதை போய் அவங்க அப்பாவிடம் போட்டு கொடுத்து விட்டான்..அன்றில் இருந்து அவர் கண்ணில் மாட்டாம இருக்கிறேன். இன்னைக்கு அவர் அங்க வந்தார்ன்ன எனக்கு தீபாவளி தான்.

நீ ரொம்ப பயபடுற விசு, இதை எல்லாம் மனசுல வச்சிக்காம கிளம்பு.

சரி சத்தி,  இந்த இடத்திற்கு நம்ப பேராசிரியர்கள் எல்லாம் கூட வருவாங்களா?

ஆமா விசு, மாணவர் -ஆசிரியர் கலந்து ஒரு டின்னெர் தான். வா.

சத்தி.. உனக்கு நினைவு இருக்கானு தெரியல.. "நல்லவனுக்கு நல்லவன்" படம் வெளியான நாள், நம்ப எல்லாம் "டிக்கட்"க்கு அங்க தியேட்டரில் காத்து கொண்டு இருக்கும் பொது, நம்ப பொருளாதார பேராசிரியர், "காந்தி",  தம்பி நீ நம்ப கல்லூரியில் தான் படிக்கிறாயா என்றார். ஆமாம் என்றேன். ஒரு 10 ருபாய் கொடுத்து, எனக்கும் ஒரு டிக்கட் வாங்கு என்றார். நானும் அதை வாங்கி கொண்டு, இடைவெளி நேரத்தில் "க்ரீம் பன், காபிக்கு" செலவு பண்ணிட்டேன்.

விசு, அப்ப அவருக்கு டிக்கட்....?

அவருக்கு டிக்கட்டா? மொய் தான். விஷயத்த கேளு சத்தி. அன்றையில் இருந்து அவர் ஒவ்வொரு வகுப்பா போய் யார் அந்த  "நல்லவனுக்கு கெட்டவன்" ன்னு தேடி கொண்டு இருக்கார்? அவரிடம் மாட்டினால் எனக்கு சங்கு தான்.

அட விடு விசு.. நீ சும்மா அலடிக்கிற..

சரி,அவங்க கஸ்தூரி வருவாங்களா?

கஸ்தூரி வீடு இங்கே பக்கம் தானே விசு, கண்டிப்பா வருவாங்க, அவர்களிடம் என்ன பிரச்சனை?

ஒன்னும் இல்ல சத்தி, பரீட்சைக்கும் ரெண்டு வாரம் முன்னால அவர்களிடம் அந்த "வருமான வரி" புத்தகம் கடன் வாங்கினேன். அதை திருப்பி தரவில்லை. அவங்க அந்த பாடத்தில் தேர்வு பெறாமல் தோல்வியுற்ற நாளில் இருந்து, "பத்ரகாளி" பானியில் " அவன் மட்டும் என் கையிலே கிடைச்சான்" ன்னு சொல்லிட்டு அலையிறாங்கன்னு கேள்வி பட்டேன்.

விசு, போற போக்க பாத்தா , நம்ப வகுப்பு மாணவர்கள் - ஆசிரியர்கள்.. எல்லோருக்கும் எதோ ஒன்னு பாக்கி வச்சி இருக்க போல இருக்கே, நீ புறப்பட்டு வா, அப்படி யாராவது தகராறு பண்ணா, அங்கேயே மன்னிப்பு கேட்டுக்கோ. உன் மனசாட்சி உன்னை இனிமேல் உறுத்தாது..கிளம்பி வா..

இன்னும் எவ்வளவோ இருக்கு சத்தி..

பயப்படாத விசு.."யாம் இருக்க பயம் ஏன்"?.

நான்கு மணி நேரம் கழித்து:

சத்தி.. செம "டின்னெர்" சத்தி. உன்னக்கு ரொம்ப நன்றி.

நானும் என்ஜாய் பண்ணன் விசு, ரொம்ப நல்லா இருந்தது.

சரி சத்தி, எப்படிப்பா எல்லாரும் வந்து இருந்தாங்கோ. ஒவ்வொருவரையும் பார்க்கும் போதும் நெஞ்சில்... திக் திக் திக்ன்னு இருந்தது. என்ன இருந்தாலும், இவங்க எல்லாருக்கும் ரொம்ப நல்ல மனசு சத்தி. என் மேல ஒருத்தர் கூட கோப படல.

எப்படி விசு கோப படுவாங்க.. ? இது நாம 25 வருட நிறைவு விழா சந்திப்பு ஆச்சே. நாங்களாவது பரவாயில்லை, இங்க வாழ்வதால் எப்பயாவது ஒருத்தரை ஒருத்தர் அங்கே இங்கே என்று பார்த்து கொள்வோம். நீ படிச்சி முடித்தவுடனே விமானத்தில் ஏறிட்ட. இந்த 25 வருஷ சந்திப்பு விழாவிற்கு நீ வர என்றவுடன் எல்லாருக்கும் ரொம்ப சந்தோசம். அதுமட்டும் இல்லாமல் உனக்கு "குற்றமுள்ள நெஞ்சு குறு குறு"ன்னு இந்த விஷயம் எல்லாம் மனதில் இருக்கு. மத்தவங்க அதை பத்தியே யோசிக்க வில்லை.

சரி, சத்தி அப்புறம் பார்க்கலாம்.

விசு, உன்னிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டும்,தவறா யோசிக்க மாட்டியே?

சொல்லு சத்தி.

இல்ல, அந்த "நல்லவனுக்கு  நல்லவன்" படம் இடைவேளையில் "க்ரீம் பன் - காபி" நீ வாங்கினாதா சொன்னீயே, அது தவறு. அன்றைக்கு யாரிடமும் காசு இல்லைன்னு சொல்லி மொத்தம் செலவை 18.50 என் தலையில் தானே கட்டினீங்க. இப்போ ஏதோ புது கதை சொல்லுறியே...

அட விடு சத்தி, இது எல்லாம் ஒரு விஷயம்ன்னு ... இவ்வளவு நாளா மனசில வச்சிக்குனு...  

13 கருத்துகள்:

  1. ரசிக்க வைத்தது. எல்லோரும் ஒரே மாதிரிதானுங்கோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி காயத்ரி அவர்களே... வருகைக்கும் வாழ்த்துக்கும் ...

      நீக்கு
  2. மிக அருமையான நடையில் எழுதிய பதிவு . மிக மிக ரசித்து படித்தேன்.... இன்று நான் படித்த பதிவுகளில் மிக மிக எஞ்சாய் பண்ணி படித்த பதிவு இது.. பாராட்டுகள் விசு சார்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை தமிழா... சும்மா ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒருமுறை அத்தி பூத்தாற்போல மேடை பேச்சு பேசி கொண்டு இருந்த என்னை உங்கள் - எங்கள் நண்பர் "கிழக்கு பரதேசி", நீ ஏன் இடுகைகள் எழுத கூடாதுன்னு சொன்னனால எழுத ஆரம்பிச்சேன். உங்களை மாதிரி, ஊக்குவித்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றதால், எழுதி கொண்டு இருக்கிறேன். எவ்வளவு நாட்களுக்கு என்று தெரியவில்லை, வண்டி ஓட்ற வரைக்கும் ஓடட்டும்.

      நீக்கு
  3. தலைப்பு வைக்கும் போது இன்னும் கொஞ்சம் யோசித்து வையுங்கள் அது முக்கியம் பதிவு ஹிட்டாக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திற்கு நன்றி மதுரை, கண்டிப்பாக இன்னும் கவனம் செலுத்துவேன்.

      நீக்கு
  4. ஒருத்தர் பாக்கி விடாம கலாய்ச்சு இருக்கீங்க! சுவையான இடுகை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நாட்களே தனி தானே சுரேஷ்.. மீண்டும் ... வரும்... ஆனால் வராது...

      நீக்கு
  5. ரசித்தேன்
    சுவைத்தேன்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    சில விடயங்களை யதார்த்தமாகஉள்ளது நல்ல உரையாடல் வடிவில் சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  8. அய்யய்யோ கெட்டவன் கூடெல்லாம் சேரக்கூடாதுன்னு எங்கப்பாரு சொல்லிருக்காரே ?இப்ப என்ன செய்றது ?

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...