Sunday, July 27, 2014

நேத்து ராத்திரி யம்மா....

நேத்து ராத்திரி ஒரு 7 மணி போல்...

ரிங் ... ரிங் .. .தொலை பேசி ரிங்கியது...

எடுத்து  பார்த்தால் நண்பன் தண்டபாணியின் மனைவி சுந்தரி..

சொல்லு சுந்தரி..

அண்ணே உடனே வீட்டுக்கு வாங்க.

என்னமா அவசரம், தண்டபாணி எங்கே?

அவரை பத்திதான் பேசவேண்டும், ப்ளீஸ், உடனே புறப்பட்டு வாங்க.

இஸ் எவ்ரிதிங்  ஓகே?

இல்லனா, உடனே வாங்க...நான் ரொம்ப நேரம் போனில் இருக்க முடியாது..

வண்டியை எடுத்தேன்.. என் வீட்டில் இருந்து தண்டபாணி வீடு ஒரு 40 கி மீ இருக்கும். ஒரு இருபது நிமிடத்தில் சேர்ந்துவிடலாம். இருந்தாலும், அந்த இருபது நிமிடம் ரொம்ப கொடுமையானது. என்ன ஆச்சி தண்டபாணிக்கு? ஆண்டவா ! எதுவும் தவறாக நடந்து இருக்க கூடாது. தண்டபாணி இல்லத்தை அடைந்தேன்.

என்ன ஆச்சி சுந்தரி, தண்ட பாணி எங்கே?

அண்ணா, உட்காருங்க சொல்லறேன்,

சாயங்காலம் பிள்ளைகளோடு பக்கத்தில் உள்ள கோயிலுக்கு போனோம், வர வழியில் ஒருவன் குடித்து வந்து மோடி விட்டான்.

பிள்ளைகளும், தண்டபானியும் ஓகே வா.

யாருக்கும் அடி இல்ல அண்ணே, ஆனால் வண்டி "டோட்டல் டேமேஜ்"

சரி, இப்போ தண்டபாணி எங்க.

அண்ணே, அவர் ஆபிஸ் வண்டி தானே அதனாலே அவர உடனே ரத்த பரிசோதனைக்கு அனுப்புனாங்கோ.

தண்டம் தான் குடிக்கவே மாட்டனே, அதனால் அதுல எதுவும் பிரச்னை வராது, கவலைபடாதே.

ஐயோ, அங்க தான் அண்ணே, பிரச்சனையே, இன்னிக்கு சாயங்காலம், இந்தியாவில் இருந்து வந்த அல்வாவை நிறைய சாப்பிட்டார்.

அதுல என்னமா பிரச்சனை? சக்கரை வேனும்ம்னா ஏறி இருக்கும். மத்தபடி வேறு ஒரு விஷயம் எதுவும் இல்லையே.

அண்ணே, நிதானமா கேளுங்கோ. அந்த அல்வா எதோ வட இந்தியா ஸ்டைல் அல்வா.அதில நிறைய "கசகச" ன்னு சொல்வாங்களே... "பாப்பி சீட்ஸ்.."


அட பாவி, தண்டபாணி மாட்டினான். "கசகச" சாப்பிட்டு ரத்த பரிசோதனை போனா போதை பொருள் சாப்பிட்ட மாதிரி இல்ல ரிப்போர்ட் வரும்.

அப்படி தானே வந்துடிச்சி.

சரி, இப்ப எங்க தண்டபாணி?

இப்ப தான் அண்ணே அவர் ஆபிஸ் ஆளுங்களிடம் விவரித்து சொல்ல போய் இருக்காரு.

இப்படி பேசி கொண்டு இருக்கும் போதே தண்டபாணி வந்து சேர்ந்தான்.
வா, தண்டம், என்ன ஆச்சி?

வாத்தியாரே, அல்வா கொடுத்தியா, அல்வா கொடுத்தியானு நம்ப கிண்டல் பன்னுவோம் இல்ல, அதன் அர்த்தம் இன்னைக்கு தான் புரிஞ்சது.

டேய், ஜோக் பண்ணற நேரமா இது. விஷயத்த சொல்லு.

ரத்த பரிசோதனையில் நான் போதை பொருள் எடுதததா வஞ்துடிச்சி வாத்தியாரே. என்ன பத்தி எனக்கு தெரியும் இல்ல? நான் குடிக்கற தண்ணிய கூட அடுத்தவன் குடிச்சி அஞ்சி நிமிஷம் கழிச்சி தான் குடிப்பேன். போதை பொருள் , வாய்ப்பே இல்ல இல்லை. அப்படியே அசந்து போய்டேன். எங்க ஆபீஸில், அட பாவிங்கள, நான் கிட்ட தட்ட பத்து வருஷமா வேலை செய்யறேன், ஆபிஸ் பார்டியில் கூட எதுவும் குடிக்க மாட்டேனே. நான் போய் போதை பொருள் எடுப்பேனா? என்னுடைய ரெகார்ட்ஸ் எடுத்து பாருங்கடானு சொன்னேன்.  அப்ப அங்க வேலை செய்யும் ஒருத்தர் தான் இது "பாப்பி சீட்ஸ்" சாப்பிட்டால் கூட வரும் என்றார். நான் எங்கடா "பாப்பி சீட்ஸ்" சாப்பிடபோறேன்னு யோசிக்கும் போது தான் இந்த வட இந்திய அல்வா நினைவிற்கு வந்தது. நல்லா இருந்தது ஒரு கால் கிலோ ஒட்டிட்டேன், அதுல வந்த வம்பு இது.

சரி, இப்ப மேட்டர் செட்டில் ஆச்சா?

எல்லாம் ஓகே வாத்தியாரே. கடவுள் புண்ணியத்தில் தலைக்கு வந்தது தொப்பியோட போச்சி.

சரி ஜாக்கிரதை யா இரு. பாரு அவங்க சுந்தரி, என்னம்மா நொந்துடாங்க.

அவங்க ரொம்ப தைரியசாலின்னு நான் நினைச்சேன், ஆனா படா பயந்தாகொளி. சரி நான் கிளம்புறேன்..

வாத்தியாரே, வீட்டுக்கு வந்து கை நினைக்காம போறியே...

விடு பாணி, இன்னொரு நாள் பாத்துக்கலாம்.

வாத்தியரே,  ஒரு நிமிஷம் இரு.. சுந்தரி, வாத்தியாருக்கு அந்த வட இந்தியா அல்வா ஒரு கால் கிலோ ஒரு தட்டுல போட்டு எடுத்துனு வா..

எனக்கே அல்வா... போடாங்க...

பின் குறிப்பு:
"கச கச" பெருகேற்ப கொஞ்சம் தொந்தரவு பிடித்த விஷயம் தான்.நானும் கூகிளில் தேடி சில விஷயங்களை கற்று கொண்டேன். இதை தவிர்ப்பது நமக்கு நல்லது..

Just do a google search on " Poppy seeds and blood test" you'd be surprised.

2 comments:

  1. Its not a surprise at all, From the English name itself we can understand that "khas khas" is from the poppy plant!, Yes the same poppy plant that gives opium. Khas khas is the roasted seeds of poppy. It does contain small quantities of the alkaloids, morphine, papaverine,etc. Consuming considerable quantities of the seeds will naturally affect the blood values!!
    In many middle east countries, carrying poppy seeds is a punishable offence, You cant bring it in!.

    ReplyDelete
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...