Saturday, July 26, 2014

என்னாது? பிரதமர் மோடி ஆட்சியில் ஊழலா?பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல் நடக்கவே நடக்காது என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் கண்டிப்பாக சென்ற ஆட்சியை போல் நடக்க வாய்ப்பே இல்லை.

என்னப்பா ? "பி ஜே பி" அரசியல்வாதிகள் எல்லாம் உத்தம புத்திரர்களா என்று சிலர் கேட்க்கும் கேள்வி எதிரொலிக்கிறது. நான் ஒன்றும் அப்படி சொல்லவில்லை. அறிஞ்ஞர் அண்ணாவே "அரசியல் ஒரு சாக்கடை" என்றார். அதை மறுதலிக்க நான் யார்?

ஊழல் குறையாது, இவர்கள் எல்லாரும் "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்று பலர் கூறுவதும் கேட்கிறது. பின் எப்படி நான் "ஊழல் கண்டிப்பாக குறையும் என்று அடித்து சொல்கிறேன்? பொறுமை.

ஊழல் குறைந்த ஆட்சிக்கு காரணம், தூய சிந்தனை உள்ள அரசியல் வாதிகளோ, அல்ல படித்த அரசியல்வாதிகளோ,  நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள அரசியல்வாதிகளோ  இல்லை.
இதற்க்கு முக்கிய காரணம்... "தகவல் தொடர்பு முன்னேற்றம்". பார்க்கின்றவன் கையில் எல்லாம் "புகைப்பட கருவி". எங்கே சென்றாலும் எவனிடம் பேசினாலும் பயமாக உள்ளது.  எப்படி மாட்டாமல் ஊழல் செய்வது என்பது தான் எல்லாருக்கும் இருக்கும் யோசனை.

உதாரணத்திற்கு  எடுத்து கொள்வோம், கடந்த சில வருடங்களில் இதனால் மாறியவர்கள்

ராகுல் காந்தி தூங்கி மாட்டினார்!
யோகா குரு ராம் தேவ் " முட்டாளே, சுப் கரோ" " முட்டாளே, அமைதியாக இரு" என்று  சொல்லி மாட்டினார்!
கதவை திறந்து காற்றுக்காக காத்திருந்து ஒருவர் மாட்டினார்
கர்நாடக சட்டசபையில் சில MLA  பலான படம் பார்த்து மாட்டினார்கள்
சிங்வி, சட்ட அலுவலகத்தில் சல்லாபம் செய்து மாட்டினார்.
மோடியும் - அமித் ஷாவும் கண்காணிப்பு (தகப்பனின் ஆதரவோடு) செய்து, மாட்டவில்லை.

இவ்வாறாக பல பேர் கடந்த சில வருடங்களில்மாட்டிகொண்டார்கள் . தற்போதைய நிலவரம் அதை விட மோசம்.எழுதுகோலில் இருந்து கொண்டை ஊசி வரை எல்லா இடத்திலும் "புகைப்படகருவி".

அடுத்த வேலை சோறு இருக்கோ இல்லையோ, "ஆன் லைன் அக்சஸ்" அவனனிடம் இருக்கு. ஒரே நிமிஷத்தில வண்டவாளம் எல்லாம் "யு ட்யுப்" மூலமா உலகம் முழுவதும் போய் சேரும். ஊழல் பேச்சுவார்த்தை இனிமேல் ரொம்ப கடினம் தான்.

இப்போது அரசியல்வாதி யாரையாவது பார்க்க போக வேண்டும் என்றால், விமான நிலையத்திற்குள் போவதை விட ரெண்டு மடங்கு சோதனை. ஏற்கனவே பிரதமர் மோடி அவர்கள், தம் ஆட்களுக்கு, ஊடகங்களை சந்திக்க வேண்டாம் என்று ஒரு ஆணை இட்டுள்ளார்.

ஊழல் குறைவதற்கான அடுத்த காரணம்... "அர்னப் கோஸ்வாமி" மற்றும் அவரை போல் பல மீடியா ஆட்கள். இவர்கள் வெறும் வாயிலேயே "பபிள்" விடும் ஆட்கள். இப்படி யாராவது மாட்டினால், வாய் வழியாவே விமானத்த விடுவாங்க.

கடைசியாக, ஜெயமாலி... சாரி.. ஜெத்மலானி, சுப்ரமணிய சாமி போன்ற ஆட்களை அருகில் வைத்து கொண்டு ஊழல் செய்வது, "சொந்த செலவில் சூனியம்" வைத்துகொள்வதுபோல்.. இந்த பூனைகள் எப்ப மதில் ஏறும் என்று இந்த பூனைகளுக்கே தெரியாது.

இந்த சில காரணங்களினால் தான் அடித்து கூறுகிறேன், பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல் காங்கிரஸ் ஆட்சியைவிட மிகவும் குறைந்தே இருக்கும்.

பின் குறிப்பு:
ஊழல் எப்படி குறையுதுன்னு என்பது முக்கியம் அல்ல, எப்படியாவது குறைந்தால் போதும். நண்பர்களே, நீங்கள் கூட எப்போதும் கையில் கமராவோடு இருங்கள், அதே நேரத்தில், எதிரில் இருப்பவனிடம் கூட "காமரா" இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.

2 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள்! அருமையான பதிவு!

    ReplyDelete
  2. தலைவர்கள் மாறலாம்
    ஊழல் வடிவம் மாறலாம்
    உண்மை மாறவில்லை!

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...