ஞாயிறு, 20 ஜூலை, 2014

"மண் வாசனை" , இல்ல இது "பன் வாசனை."

ரிங்.. ரிங்...தொலைபேசி ரிங்கியது....

விசு பேசுறேன்..

வாத்தியாரே.. தண்டம், ஐ  மீன் தண்டபாணி பேசுறேன்.

சொல்லு பாணி, பொதுவா சனி தான கூப்புடுவ  , இன்னைக்கு என்ன அவசரம்?

வாத்தியாரே, இப்பதான் கதிர் வீட்டில இருந்து வரன், உன்னையும் எதிர்பார்த்தேன், நீ எங்க காணோம்?


என்ன பாணி, அங்கே விஷேசம்?

என்ன விசேஷமா? கதிர் பொண்ணுக்கு இன்னைக்கு "மஞ்சள் நீராட்டு விழா"!

அமெரிக்காவில் வந்து "மஞ்சள் நீராட்டு விழாவா"? விவரமா சொல்லுடா.

வாத்தியாரே சும்மாதான் , உன்ன அண்ணே அண்ணேன்னு கூப்பிடுறாங்க. "பந்தல"  வடக்க  "லாஸ் அன்ஜெல்சில்" இருந்து  நம்ம "குமரேசு"  இல்ல "குமரேசு", அவரை வைச்சு போட்டுடாங்க!

"நாட்டாமை... தீர்ப்ப..".

வாத்தியாரே... உணர்ச்சிவசப்படாத, இது ஒன்னும் நாட்டமை விஷயம் இல்ல. இப்ப என்ன பண்றது?.

எப்படி தண்டம் நான் இப்ப இந்த ஊரில முகத்த வெளிய காட்டுவேன். கதிர் இந்த மாதிரி பண்ணிடாரே.

வாத்தியாரே..இதே இந்தியாவா இருந்தா இந்நேரம் நடக்கறதே வேற..அமெரிக்காவா இருக்கனாலே பொறுத்துன்னு இருக்கேன், உள்ளூர் காரங்க நம்ம இருக்கும் போது வடக்கன வைச்சி..

தண்டம்.. கதிர் நம்மை ரொம்ப குறைச்சி எடை போட்டுட்டார். எட்ரா வண்டியை, ரெண்டுல்ல ஒன்னு பார்த்துடுவோம்.

கதிர் வீட்டின் எதிரில்..

நாட்டாமை..

வாத்தியாரே, திரும்பவும் சொல்லுறேன், இது நாட்டாமை பிரச்னை இல்ல.அந்த டைலாக் இங்க வொர்க் அவுட் ஆகாது.

அது என்னமோ தெரியிலே தண்டம். இந்த மாதிரி நேரத்தில்... இந்த " நாட்டாமை' டைலாக் ரொம்பா பொருத்தமா இருக்கு,

விஷயத்துக்கு வா, வாத்தியாரே.

கதிர்... வெளிய வா?

வா வாத்தியாரே? எங்க இந்த பக்கம்?

கதிரு... அழையா விருந்தாளியா என்னை ஆகிட்ட பத்தியா?

விவரமா சொல்லு வாத்தியாரே?

பொண்ணுக்கு மஞ்சள் நீராட்டு விழா வைச்சியா?

ஆமா வாத்தியாரே?

உன் மனைவி என்ன தானே "அண்ணே, அண்ணே"ன்னு  நிமிஷத்துக்கு 1000 முறை கூப்பிடுவாங்க. அப்புறம் எப்படியப்பா வடக்கனை வைச்சி  "பந்தல்" போட்ட?

வாத்தியாரே, என்ன மறந்துட்டியா? போனவாரம், வெள்ளி என்னா பண்ற? வீட்டில் விசேஷம், "பந்தல்" போட வரியான்னு கேட்டதுக்கு நீ தானே முடியாதுன்னு சொன்னே?

எப்ப கதிர்? எனக்கு கொஞ்சம் கூட நினைவு இல்லையே?

திங்கள் நான் கூப்பிட்டேனே, நினைவு இருக்கா?

ஆமாம் கதிர், கூப்பிட்ட... ஆனால் வெள்ளி எதோ விசேஷம் இருக்கு "சுண்டல்' போடா முடியுமான்னு கேட்ட? அது தான் நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.. இப்ப "பந்தல்" அது இதுன்னு கதை "கந்தல்" ஆகுதே..

நான் சொன்னது "பந்தல்" வாத்தியாரே... உனக்கு சரியா புரியலே...

சாரி கதிர், இருந்தாலும் நீ வடக்கனை கூப்பிட்டது .....

சரி விடு வாத்தியாரே...இது ஒரு விஷயமே இல்ல..

சரி கதிர்... நல்ல வாசனை வருதே... இது என்ன உங்க ஊர் "மண் வாசனையா"?
இல்ல வாத்தியாரே.. பக்கத்துல தான், பேக்கரி.. இது அங்க இருந்து வர "பன்  வாசனை"..

நாங்கள் கிளம்பியவுடன் .. கதிரும் அவர் மனைவியும்..

ஏங்க.. எப்படி சமாளிச்சிங்க?

ஒன்னும் இல்ல, அன்னைக்கு நம்ம வாத்தியார 'சுண்டல்" போட முடியுமான்னு கேட்டோம் இல்ல.

ஆமாங்க.. அவருதான் முடியாதுன்னு சொன்னாரே..

நாங்க "சுண்டல்" போட முடியுமானே கேட்கவில்லை, "பந்தல்" போட முடியும்மானு தான் கேட்டோம்ன்னு சொன்னேன். நம்பிட்டார்.
.

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. சுண்டல்... பந்தல் அதை விடுங்கள் ஐயா. கதை கந்தல் ஆகிவிட்டதே...

      நீக்கு
  2. அண்ணிக்கிட்ட வாங்குற பல்ப் பத்தாதுன்னு அக்கம், பக்கத்துலயுமா!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊர்க்காரன் நான் இருக்கும் போது வடக்கில இருந்து ஒருத்தர் வந்து, பந்தல் போட்டா?

      நீக்கு
  3. visu, irruku ungaluku aapu. Subramania samy kitta pottu vaikiraen

    பதிலளிநீக்கு
  4. ஆஹா அற்புதம்! ஆழ்ந்த சிந்தனை, மிக சிறந்த சொற்கள், என் ஐயத்தை நீக்கும் அற்புதமான கருத்துக்கள்...அந்த "வடக்கன்"? இப்போது "தெற்கு தெரு மச்சான்" ஆகிவிட்டான் என்று சொல்லுங்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வா வெங்கி வா!. எங்க சொந்த மண்ணில் பந்தலை போட்டுட்டு, இப்ப வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வந்தியா... வா... வா...

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...