புதன், 16 ஜூலை, 2014

பொண்டாட்டி பிறந்த நாளை மறந்துட்டியா? உனக்கு "பால்" தான்...

கீழ் மூச்சும் மேல் மூச்சும் மாறி மாறி விட்டு கொண்டேபேய் அறைந்தது போல் ஓடிவந்தான், (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்). ஓடி வந்த தண்டபாணியை என்னப்பா ஆச்சின்னு கேட்டது தப்ப போச்சி.  வாத்தியாரே மோசம் போயிடிச்சேன்னு சொன்னான். விளக்கமா சொல்லு பாணி  என கேட்ட எனக்கு அவன் கொடுத்த பதில் ரொம்ப சாதாரணமா இருந்தது.


இன்னிக்கு என் பொண்டாட்டி பிறந்தநாளாம், நான் மறந்தே போயிட்டேன் என்றான். அட பாவி இதுக்கு போய் ஏன்டா இவ்வளவு பதறுற என்று கேட்டதிற்கு அவன் கொடுத்த பதில் என்னை அதிர வைத்தது.

என்னா வாத்தியாரே, இவ்வளவு சிம்பிள்ளாசொல்லிட? போனவாரம் கூட நானும் என் மனைவியும் நீ உன் பொண்டாட்டி பிறந்தநாளை மறந்துட்டு நீ பட்ட பாட பேசி சிரித்தோம் சொன்னான். அட பாவி, அந்த  விபத்த நானே மறந்துட்டேன், நீங்க எல்லாம் இன்னும் நினைவில் வைத்து இதில் சிரிப்பு வேற என்று சற்று நொந்தேன்.

சரி, இப்ப மணி இரவு 7:30 ஆச்சே இப்ப எப்படி ஞாபகம் வந்ததுன்னு கேட்டேன். ஒன்னும் இல்ல, நம்ப அடுத்த தெரு மாணிக்கவாசகம்  இப்ப தான் போன் பண்ணான். அவன் மனைவி கிட்ட என் மனைவி சொன்னாளாம். இன்றைக்கு என் பிறந்தநாள், என் கணவர் ஏதோ "சர்பிரைஸ்" பண்ண போறாருன்னு. அதுதான் அடிச்சி புடிச்சி ஏதாவது வாங்கிட்டு போலாம்னு வந்தேன்னு சொன்னான்.

இப்ப 7:30 மணி ஆச்சே பாணி, எதுவுமே கிடைக்காதே சொன்னேன்.வாத்தியாரே, வீட்டுலே எதாவது "கிப்ட் பேக்" பிரிக்காத ஏதாவது இருந்தா ஒன்னு குடு, நாளைக்கே திருப்பி தரேன் சொன்னான்.
அட பாவி  நம்ப நிறைய கிப்ட் அட்வான்சா வாங்கி வச்ச விஷயம் இவனுக்கு எப்படி தெரியும்ன்னு கேட்பதற்கு முன்னே, நீ தான் அந்த பிறந்த நாளை மறந்ததில இருந்து அடுத்த 6 வருஷத்துக்கும் பரிசு வாங்கி ஒளிச்சி வைச்சிருக்கான்னு ஊரே பேசுதேன்னு சொன்னான்.

சரி வீட்டுக்கு வானு சொல்லி அவனுக்கு ஒரு   புது டப்பாவில் இருந்து பிரிக்காத ஒரு "சப்பாத்தி மேக்கர்" கொடுத்தேன். அதை பார்த்தவுடன் அவன் அழுதே போய்ட்டான். வாத்யாரே, "இது கை இல்ல கால்லுன்னு" ஒரு கும்பிடு போட்டன். பாணி, உணர்ச்சிவச படாத, ஒரு ஆணின் கஷ்டம் ஆணுக்குதான் தெரியும், இதுக்கு போய் இவ்வளவு "பீல்" ஆகா கூடாதுன்னு சொன்னேன். அதற்கு அவன் இது ஒரு சாதாரண கிப்ட் இல்ல, என் உயிர் காத்த தெய்வம். இதுனால ஒரு கல்லுல ரெண்டு மாங்கா இல்ல ஒரு தோப்பே அடிச்சேன்னு எனக்கு ஒரு பாராட்டை தெரிவித்தான் . புரியும் படியா சொல்லுனு சொன்னேன்.

 வாத்தியாரே, என் கைரேகையை கொஞ்சம் பாருன்னு சொல்லி கைய காட்டுன்னான். அவன் கையிலே ரேகையே காணோம். என்னடா ச்சி கேட்டேன். தினமும் நான் தான் வீட்டில் சப்பாத்திக்கு மாவு பிசையெரென்னு சொல்லி அழுதான். அவன் இத சொல்லுபோதே மெதுவா என் ரெண்டு கையையும் நான் என் "பாக்கெட்" உள்ள விட்டுவிட்டேன்.

"சரி, வேளையோட போய் வீட்டை சேறு"சொல்லி விடை பிரியும் போது, அது சரி வாத்தியாரே பொண்டாட்டி பிறந்தநாள மறக்காம இருக்க என்ன பண்ணலாம்னு கேட்டான். நீ போ, நாளைக்கு போன்ல சொல்லுறேன் அப்படியே அசந்தேன்,

பொண்டாட்டி பிறந்த நாள மறக்காம இருக்கனும்ன்னா  என்ன பண்ணலாம்?.

தினமும் கலையில் எழுந்தவுடனே பல் விளக்கும் முன்னாலே இன்றைக்கு பொண்டாட்டி பிறந்த நாளான்னு செக் பண்ணிக்கோ. 365 நாளில் ஒரு நாள் வந்தே தீரும்.

பிள்ளைகளிடம் அம்மா பிறந்த நாளுக்கு வெளிய சாப்பிட போலாம்ன்னு சொல்லி வைச்சிரு, அவங்க எப்படியும் நினைவு படுத்துவாங்க.

கல்யாணம் பண்ணும் முன்னாலே எனக்கு இந்த பிறந்த நாள் எல்லாம் கொண்டாட விருப்பம் இல்ல, நீ என் அருகில் இருக்கும் ஒவ்வோர்  நாளும் பிறந்த நாளேன்னு பொதுவா சொல்லி வச்சிரு.

உன் பிறந்த நாளை அவங்க எப்படியாவது ஒருதரவ மறக்கிற மாதிரி ஏதாவது பண்ணு. இந்த விஷயத்தில மட்டும் நீ வெற்றி பெற்ற,  பிறகு நீ பொண்டாட்டி பிறந்த நாளை பற்றி கவலையே படவேண்டாம், எப்ப மறந்தாலும், நீ கூட தான் ஒரு முறை மறந்தன்னு சொல்லி தப்பிக்கலாம்.

இப்படி யோசித்தே தூங்க போய்டேன்.

அடுத்த நாள் காலையில் ஆபீஸ் போற வழியில் காபி குடிக்க போற வேலையில் நம்ப பார்த்தசாரதி மாமனார், மாமியாரை பார்த்தேன்.மாமி  கொஞ்சம் அசந்த வேலையில், மாமா, உங்களுக்கு  கல்யாணம் ஆகி 40 வருஷம் ஆச்சே, இதுவரை எப்பவாது மாமி பிறந்தநாளை மறந்து இருக்கேளான்னு கேட்டேன். கல்யாணம் ஆனா முதல் வருஷம் மறந்தேன்னு சொன்னார். சரி, அடுத்த 39 வருஷம் எப்படி மறக்காம இருக்கேள் ன்னு கேட்டேன். ஒரு முறை மறந்து பாரு, பிறகு எழு எழு ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன்னு சொன்னார்.

இப்படி பேசும் போதே பார்த்தசாரதி வந்தான். சாரதி, உன் பொண்டாட்டி பிறந்த நாளை நீ எப்படி மறக்காம இருக்கேன்னு கேட்டேன். அதற்க்கு அவன் சொன்னான். நான் ரொம்ப புத்திசாலி, எங்கப்பா மறந்து பட்ட கஷ்டம் நான் கேள்வி பட்டேன். அதனால் பொண்ணு பார்க்கும் போதே ஒரு கண்டிஷன் போட்டேன்னு, சொன்னான்.

என்னப்பா அது, நம்ப எல்லாருக்கும் தெரியாத கண்டிஷன் என்று கேட்ட எனக்கு ஒரு அதிர்ச்சி. பொன்னு எப்படி இருந்தாலும் பரவாயில்லை , ஆனா அவள் பிறந்த நாளும் என் பிறந்த நாளும் ஒரே நாளா இருக்க வேண்டும்ன்னு ஒரு கண்டிஷன். சரி அப்படி அமைஞ்சததா கேட்டதிற்கு ஆமாம் என்றான். அ ப்படியே ஆனாலும் எப்படிப்பா அவள் பிறந்தநாளை மறக்காம இருக்கன்னு கேட்டதிற்கு, அது ஒன்னும் இல்ல வருஷத்திற்கு ஒரு முறை அவள் என்னிடம் வந்து " Happy Birthday" சொல்லுவா. நான் உடனே மறக்காமா "Same to you"  சொல்லுவேன்னு பெருமையா சொன்னான்.

இந்த மாதிரி "over confident" ஆனா பார்த்தசாரதி அவன் திருமண நாளை மறந்த கதைய அடுத்த வாரம் சொல்லுறேன்.

17 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி இமா.. எங்கே, தம் பிறந்த நாளுக்கு பிறகு ஆளே காணோம். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. பிறந்த நாளில் இத்தனை பிரச்சனைகளா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னத்த சொல்வேன் ஐய்யா... என்னத்த சொல்வேன்?

      நீக்கு
  3. கலியாணம் ஆனா அவ்வளவு பிரச்சனையா??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்யாணம் ஆனா இல்லை... பிறந்த நாளை மறந்தா...

      நீக்கு
  4. இப்படியும் ஒரு நிபந்தனையா...? ஹா... ஹா....

    பதிலளிநீக்கு
  5. ஏழு வருசத்துக்கு பர்த் டே கிஃப்ட் வாங்கி வச்சிருக்கீங்களாண்ணா!? முந்தா நாள் என் கல்யாண நாள், வரும் சனிக்கிழமை என் பெரிய பொண்ணுக்கு பிறந்த நாள், சின்னவளுக்கு செப் 15, பையனுக்கு டிச 6. சும்மா தகவலுக்கு சொல்றேனுங்கண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தா நாள் கல்யாண நாளா? வாழ்த்துக்கள். அதுமட்டும் இல்லாமால் பல வேறு நல்ல நாட்கள் வருகின்றது. சந்தோசம். 9000 மைல்கு அப்பால குந்திக்கினு இன்னாத்த கொடுக்க மிடியும்?

      நீக்கு
    2. அது மட்டும் இல்லாம 6 வருஷத்திற்கு தான் வாங்கி வைச்சேன். 7 எங்கு ட்டால வந்தது.

      நீக்கு
    3. சரி விடுங்க..., 6 வருசத்துக்கும், 7 வருசத்துக்கும் பெரிய வித்தியாசமில்ல! அதுமில்லாம அன்புக்கு தூரம்லாம் முக்கியமில்லண்ணா! அப்புறம் கொரியர் கம்பெனிலாம் எப்படித்தான் பொழைக்குறதாம்!?

      நீக்கு
  6. பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக்கூடாது

    பதிலளிநீக்கு
  7. பிறந்த நாளை ஒரு முறை மறந்தேன் ...திருமண நாளை இன்னொரு முறை மறந்தேன் ...
    எனக்கு கிடைத்து பால் ...

    பதிலளிநீக்கு
  8. வருண் பிளாக் மூலமாக இங்கே வந்தேன், படிச்சு ரசிச்சு நிறைய சிரிச்சுட்டேன்...உங்களின் பிற பதிவுகளையும் படிச்சே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். :-) நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து படிச்சுடுறேன்.

    அருமையான எழுத்து நடை...வாழ்த்துகள் + பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்த உமக்கும், வரவைத்த வருணுக்கும் நன்றி. தாம் ரசித்து படித்து சிரித்தேன் என்றீர்கள். அது தானே எழுத்துக்கு வெற்றி. பின்னூட்டத்தை படித்து நானும் மகிழ்ந்தேன். மேலே கூறியது போல் தமிழ் மேல் எனக்கு ஒரு தலை காதல். ஆதாலால் எழுத்து பிழைகள் இருக்கும். பொறுமையுடன் படிக்கவும்.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...