சனி, 28 ஜூன், 2014

சுவாரஸ் இல்லாமல் சுவாரசியமே இல்ல .


எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே மனதில் பட்ட கதை ஆதாம் ஏவாள் மற்றும் அவள் அந்த பழத்தை கடித்த "கடி"! இந்த கடியை நினைத்து நொந்து கொண்டு இருக்கையில் நம்ப உருகுவேவை சேர்ந்த கால்பந்து ஆட்டக்காரர் "சில்லினோ" எனும் இத்தாலிய வீரரை "சில்லி சிக்கன்" என்று நினைத்து கடித்து வைத்து விட்டார்.

அவர் கடித்த பின்பு அவரும் சரி மற்ற வீர்களும் சரி போட்ட நாடகம் 3வது படிக்கும் போது  நான் போட்ட ஒரு சண்டையை தான் நினைவுபடுத்தியது.
சரி, அதை விடுங்கள், கதைக்கு வருவோம். இப்போது கால்பந்து அதிகாரிகள் அவருக்கு 9 ஆட்டங்கில் தடை விதித்ததால் உருகுவே அணி இவர் இல்லாமல் ஆடவேண்டிய நிர்பந்தம்.
ஒரு கடிக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? ஒருவர் தவறுக்கு ஒரு நாட்டை தண்டிப்பதா? என்னை பொறுத்தவரை இது பிக் பாகெட் அடித்தவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தது போல்.
சுவாரஸ் ஒரு தலை (கெட்ட) சிறந்த வீரர். அவரின் சேவை கால்பந்திர்க்கு தேவை.



வேண்டும் ஆனால் இப்படி செய்யலாமே. அடிக்"கடி" மற்றவர்களை "கடித்து" வரும் இவரின் 32 பல்லையும் புடுங்கி விட்டு இவரை ஆட்ட களத்தில் இறக்கலாமே! இப்படி செய்வதின் மூலம் இவரும் ஆடலாம், உருகுவே நாட்டிற்கும் கால்பந்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி.
என்ன சரிதானே?

வெள்ளி, 27 ஜூன், 2014

வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடி...


வகுப்பறையில் கடிகாரம் இல்ல, உன் கையில வாட்ச் இல்ல. அது எப்படி உனக்கு மட்டும் எந்த வகுப்பு எந்த நேரத்தில் முடியும்னு சரியா தெரியுது?
பல வருடங்களுக்கு முன் சீர்காழியில் பள்ளிகூடத்தில் படிக்கையில் பக்கத்தில் அமர்ந்து இருந்த சீதாராமன் கேட்ட கேள்வி இன்று நினைவிற்கு வந்தது. இது எப்படி இப்ப நினைவிற்கு வந்தது என்று கேட்கின்றீர்களா? சொல்லுறேன்.

போன இடுகையில்

("நோ தங்கமணி நஞ்சாய்!"

  http://vishcornelius.blogspot.com/2014/06/blog-post_27.html )

சொன்ன மாதிரி அம்மணியும் ராசாதிகளும் விடுமுறை சென்று ஒரே மணி நேரத்தில் சளி, இருமல், தலை வலி மற்றும் காய்ச்சல். வேலைக்கு வர முடியாது என்று தகவலை அனுப்பிவிட்டு வீட்டிலேயே சோபாவில் படுத்து விட்டேன்,. நேரம் என்ன என்றே தெரியவில்லை. எழுந்து போய் பார்க்கவும் சோம்பேறித்தனம்.

அப்படி இருக்கும் போது என் அருகிலேயே சன்னல் வழியாக வந்த சூரிய வெளிச்சம் தான் இந்த கதைய நினைவிற்கு கொண்டுவந்தது.
1980 போல் இருக்கும் என்ன ஒரு அருமையானா நாட்கள்.
ஒருவரிடம் கூட கடிகாரம் இல்லாமல் இருக்கும் போது எல்லாரும் எல்லா வேலைகளையும் சரியாக செய்த காலம்.

அந்த காலத்தில் என் வகுப்பு அரை தென்னை கீற்றையும் தாண்டி உள்ளே வந்த அமருமே அந்த சூரிய ஒளிகதிர், அது தான் என் கடிகாரம். அது கரும்பலகையில் பட்டால் 9 மணி, அப்படியே தாண்டி ஆசிரியையின் மேசையில் அமர்ந்தால் 10. அங்கு இருந்து இறங்கி முதல் வரிசையில் அமர்ந்துள்ள சித்ராவை தொட்டால் 11, என்னிடம் வந்தால் 12, என்னை தாண்டி சென்றால் 1 என்று அந்த ஒளிகதிரை வைத்து மணி பார்த்த நேரம்.


வெயில் இல்லாத நாட்களில்,புடுபுடு காரன் வந்தால் காலை 3 பால்காரன் வந்தால் 5:30. செய்தித்தாள் வந்தால் 6. தபால் வந்தால் 9, தந்தி வந்தால் கேட்ட நேரம். காய் கரி  விற்பவன் வந்தால் 10. மீன் விற்பவன் வந்தால் 11 மதிய உணவிற்கு பிள்ளைகள் வந்தால் 12.  ஐஸ் கிரீம் விற்பவன் வந்தால் மாலை 5 தெரு விளக்கு எறிந்தால் 6. என்று எது ஒன்றுக்கும் ஒரு சரியான நேரம் ஒதுக்க பட்டு இருந்தது.


என்ன ஒரு நாட்கள். மீண்டும் வருமா? அருமை அருமை.


நோ தங்கமணி நஞ்சாய்!



புதன் அதுவுமா காலையில்9;30 மணிக்கு அலுவலகத்தை விட்டு இவ்வளவு அவசரமா எங்க போறே? போகும் போதே கேட்டு விட்டான் கூட பணி புரியும் வெள்ளைகாரன்.  அவனுக்கு ஒரு சின்ன சந்தேகம். ஏதோ நான் ஆபீஸ்க்கு மட்டம் போட்டு கால்பந்து ஆட்டம் பார்க்க போகிறேன் என்று. ஒன்னும் இல்ல, என் மனைவியும் ரெண்டு ராசாத்திக்களும் இன்று கோடை விடுமுறைக்காக இந்தியா போகின்றார்கள்  என்றேன். சரி சரி... 405 தேசிய நெடுஞ்சாலையில்  ஏதோ பெரிய விபத்து என்று கேள்வி பட்டேன், தாமதம் பண்ணாமல் சீக்கிரம் போ என்றான் (இது  எல்லாமே ஆங்கிலத்தில் நடந்த உரையாடல் தான்.) அவனுக்கு ஒரு கும்பிடு போட்டு வெளிய வந்து காரை எடுத்த சில
நிமடங்களில் றீங்க் ...றீங்க் ...

விசு பேசறேன்

ஹலோ சித்தப்பு... நோ தங்கமணி என்சாயா?

அட பாவிங்கள, எப்படி என் வீடு நடப்பை எல்லாம் உள்ளங்கை நெல்லி போல தெரிஞ்சு வைச்சி இருக்கீங்க?

அத ஒன்னும் இல்ல சித்தப்பு. இந்த காலத்தில் ஆத்துக்காரி பிள்ளைகளை கூப்பிட்டு கொண்டு ஊருக்கு போவது குறுஞ்சி மலர் பூத்தாபல! 12 வருஷதிற்கு ஒரு முறை தான் நடக்கும் என்சாய்..

தேங்க்ஸ் மாப்பு.

அது சரி சித்தப்பு, சமையல் எல்லாம் என்ன பண்ணுவ?

சமையல் ஒரு பிரச்னை இல்ல மாப்பு, என்ன? 4 பேருக்கு சமைப்பேன், இப்ப அளவ கம்மி பண்ணி ஒருத்தனுக்கு சமைப்பேன் என்று நான் சத்தமாக சொன்னதை கேட்டு அவன் மனைவி அங்கே அவனுக்கு சங்கராபரணம் ஆரம்பித்ததை கேட்டு கொண்டே வண்டியை விட்டேன்.

உண்மையாக சொன்னால் போனால் சமையல் பிரச்னை இல்லை தான். என் வீடு அம்மா அடுத்த 3 வாரத்திற்கு தேவையான தோசை மாவு, புளிக்காய்ச்சல் மற்றும் பல விதங்களை செய்து வைத்து விட்டுதான் சென்றார்கள்.

சரியாக 11 மணிக்கு அவர்களை விமானநிலைத்தில் விட்டு விட்டு வரும் போது ஒரு தும்மல். இது சாதாரண தும்மல் அல்ல. திப்புசுல்தான் தும்மல் போல். அது வந்த உடனே மனதில் ஒரு பயம். அட பாவி. இன்னும் இவங்க கிளம்பவே இல்லையே, அதுக்குள்ள ஏதோ காய்ச்சல் வருவதை போல் ஒரு பீலிங். பயந்து கொண்டே ஆபீஸ்க்கு சென்று ரெண்டு மாத்திரைகளை வாங்கி போட்டுக்கொண்டேன்.

ஒரு ரெண்டு மணி போல் இருக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள் என் கதவை தட்டி நீ மிகவும் கடினமாக இருமுகிறாய், உடனே வீட்டிற்கு கிளம்பு, இல்லாவிடில் நாம் அனைவரும் நோய்வாய் படவேண்டி வரும் என்றார்கள். வண்டியை எடுத்து ஒட்டுகையில் கண்  இரண்டும் சொக்குவத்து போல் ஒரு தூக்கம். எப்படியோ வீட்டை அடைந்து என் மருந்து வைக்கும் இடத்திற்கு சென்று தெர்மாமீட்டர் எடுக்க போகையில் வழியில் இருந்த எடை பார்க்கும் எந்திரத்தை சரியாக கவனிக்க்காமல் தடுக்கி விழுந்தேன். எடுத்து பார்த்தால் 101.5. ஏதோ எனக்கு தெரிந்த இரண்டு தலைவலி மாத்திரையை போட்டுகொண்டு உறங்க போனேன்.

ரிங் ...ரிங்... என்னங்க நாங்க ஒரே வந்து சேர்ந்துட்டோம்.

சற்று சுதாரித்து (நான் கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருப்பதை காட்டி கொள்ள காட்டிக்கொள்ள கூடாது என்று நினைத்து குரலை சற்று கம்பீரமாக வைத்து கொண்டு) சந்தோசம். நல்ல என்ஜாய் பண்ணுங்கள் என்றேன்.

அதை கேட்டவுடனே அம்மணி...ஏன்னா உடம்பு சரியில்லையா?

அப்படி ஒன்னும் இல்ல, கொஞ்சம் இருமல் சளி அவ்வளவு தான்.,

உடனே தெர்மா மீட்டரை எடுத்து எவ்வளவு என்று பாருங்கோ.அது அந்த மருந்து வைக்கும் இடத்தில் உள்ளது அங்கே போகும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக போங்க. நான் அவசரத்தில் அந்த எடை பார்க்கும் எந்திரத்தை அங்கே வைத்தமாதிரி ஞாபகம்.

அது சரி என்று ஒரு இரண்டு நிமிடம் கழித்து 101.5 என்றேன்.

உடனே ரெண்டு மாத்திரையை போட்டு கீழே போய் நிறைய தண்ணீர் குடியுங்கள். என்னாங்க? நாங்க வந்து இன்னும் செருப்பை கூட கழட்டவில்லை, அதுக்குள்ள இப்படி ஆகிவிட்டீர்களே.. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க.

சரி..

ராத்திரி உணவு என்ன சாப்பிட போறீங்க?

தெரியவில்லை.

கீழ போய் ரெண்டு ரொட்டி டோஸ்ட் பண்ணி பாலில் வைத்து சாப்பிடுங்கள்.
சரி என்று ஒத்து கொண்டு ரெண்டு ரொட்டி டோஸ்ட் பண்ணி பாலும் சூடு பண்ணி எடுத்து வந்த முதல் வாய் வைக்கையில் ஒன்பதாவது படிக்கையில் ஒருமுறை மருத்துவமனையில் சாப்பிட்ட நினைவு வந்தது. நொந்து போய்
அதை சாப்பிடுகையில்.. திடீரென்று ஒரு நினைப்பு. ஒரு முக்கியமான கேள்வியை கேக்க மறந்துவிட்டேனே.

 ஹலோ.. நீங்கள் எல்லாரும் என்ன சாப்பிடீர்கள்?

அது ஒன்னும் இல்லங்க...சிம்பிளா,  மட்டன் பிரியாணி, கத்திரிக்காய், பாயாசம்..

அட பாவிங்கள...மனைவி இல்லாத இந்த நாள் நோ தங்கமணி என்சாய் இல்ல.. நோ தங்கமணி நஞ்சாய் போச்சே... (தொடரும்) 

வியாழன், 26 ஜூன், 2014

நிறைவான மகிழ்ச்சிக்கு காரணம் உறவே... பணமே..

ஹலோ விசு, கலிபோர்னியா முத்தமிழ் சங்கத்தில் இருந்து ஹரி பேசுறேன்.

சொல்லுங்க ஹரி!

மனைவி, பிள்ளைகள் எல்லாம் எப்படி இருக்காங்கோ? விசு..

அவங்க நல்லா இருந்தாதானே நான் நண்பர்கள் போனையே எடுப்பேன். இல்லாவிடில் அவர்களை தானே பராமரித்து கொண்டு இருப்பேன். அங்க எப்படி சுகம்?

நல்லா இருக்கோம் விசு. அது சரி உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டுமே..

சொல்லுங்க ஹரி

வர மே மாத இறுதியில் கலிபோர்னியா முத்தமிழ் சங்க சார்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு பண்ணி இருக்கோம்.

அருமை ஹரி, அருமை...ஏழு கடல் தாண்டி வந்தும் நீயும் உன் சம்சாரமும் சேர்ந்து தமிழ் மேல் காட்டும் அக்கரைக்கு நன்றி ஹரி. அது சரி தலைப்பு என்ன?


நிறைவான மகிழ்ச்சிக்கு காரணம் உறவே... பணமே...

நல்ல தலைப்பு. பட்டிமன்றம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

விசு நான் கேட்க வந்த விஷயத்திற்கு வருகிறேன். எங்க தமிழ் சங்க சார்பில் நீங்களும் இந்த பட்டிமன்றத்தில் பேச வேண்டும் என்று நாங்கள் கேட்டுகொள்கிறோம்.

ஏன் ஹரி, இது சொந்த செலவில் சூனியம் வைச்சிக்கிற கதை போல் இருக்கிறதே.

இல்ல விசு...நீங்க பேசினால் நன்றாக இருக்கும் என்று தான் எங்களுக்கு தோன்றுகிறது.

அது சரி ஹரி, நீங்கள் நல்ல பேச்சாளர் ஆயிற்றே, நீங்கள் பேசுகிறீர்களா?

நான் இந்த சங்கத்தில் ஒரு பொறுப்பில் உள்ளதால் பேசுவது கடினம், இந்தமாதிரி நிகழ்சிகளின் போது நான் வெளியே இருந்து வேலை செய்வது தான் சரி.

அட பாவி... இப்படி சொல்லி என்னை மேடையில் ஏத்தி வேடிக்கை பார்க்க விருப்பமா? நீ பேசுகிறேன் என்று ஒப்புகொண்டால் நானும் பேசுகிறேன்.

சரி விசு, இதில் உறவே ... பணமே என்பதில் நீ எதற்க்காக பேச விரும்புவாய்.

அது முக்கியம் இல்ல ஹரி.. நீ எதில் பேச போகிறாயோ நான் அதற்க்கு எதிர்ப்பை பேச போகிறேன்...

எனக்கு எதிராகவா? ஏன் விசு இப்படி ஒரு விபரீத ஆசை.

அது ஒன்னும் இல்ல ஹரி, இதுவரை நாம் இருவரும் சேர்ந்து பேசிய பட்டிமன்றத்தில் நாம் எப்போதும் ஒரே அணியில் இருந்து பேசியதால் நண்பர்கள் ஒருவேளை இது ஒரு "மேட்ச் பிக்ஸிங்" என்று நினைகின்றார்கள்.

சரி விசு, எந்த அணி என்பதை பிறக்கு பார்த்து கொள்ளலாம், நீ நிறைவான மகிழ்ச்சிக்கு காரணம் உறவே என்று பேச தயார் பண்ணி கொள்.

நன்றி ஹரி

நன்றி விசு...

இந்த உரையாடல் முடிந்த அடுத்த இரண்டு வாரத்தில் நான் கருமமே கண்ணாயிரம் என்று உறவை பற்றி பேச தயார் ஆகி கொண்டு இருந்தேன். 8 குழந்தைகள் உள்ள இல்லத்தில் 8வதாக பிறந்தவன் அல்லவா? அதுவும் 4 வயதிலேயே தகப்பனை இழந்து விடுவதால், அண்ணன்மார், அக்காமார் அவர்களின் உறவால் உதவியால் வளர்ந்தவன் அல்லவா? அதனால் உறவே என்று பேச நிறைய கருத்துக்கள் கிடைத்தது. பொதுவாக பேசுவதை தவிர்த்து விட்டு எனக்கு நடந்த உண்மையான சம்பவங்களை வைத்து பேசலாம் என்று தயார்  பண்ணினேன். ஓரிருமுறை நண்பன் ஹரியிடம் பேசியும் காட்டினேன், அவரும் மகிழ்ச்சி அடைந்தார். பட்டிமன்றம் நடக்க இன்னும் 4 நாட்கள் தான். இந்தியாவில் இருந்து ஒரு அழைப்பு. உன் அண்ணன் தவறி விழுந்து மருத்துவ மனையில் இருக்கிறார். மருத்துவர்கள் உன்னை உடனே அழைகின்றார்கள், புறப்பட்டு வா.

ஹலோ ஹரி...விசு பேசறேன்

சொல்லுங்க விசு.

ஹரி, அவசரமாக இந்தியா போக வேண்டிய ஒரு நிர்பந்தம், என் அண்ணன் உடம்பு சரி இல்லாமல் இருக்கின்றார். நான் இந்த பட்டிமன்றத்தில் பேச முடியாது போல இருக்கு. மன்னிக்க வேண்டுகிறேன்.

என்ன விசு.. அண்ணனுக்கு என்ன ஆச்சு?

சரியா தெரியவில்லை ஹரி.. நான் இந்தியாவில் இருந்து திரும்பி வந்து பேசிகொள்கிறேன்.

சரி விசு.. ஆல் தி பெஸ்ட்.வி வில் ப்ரே பார் யு.

அடுத்த விமான பயணம், கிட்ட தட்ட 24 மணி நேர பயணம்.விமானத்தில் ஏறி அமர்ந்தது தான்... என் அண்ணன் நினைப்பு வந்து விட்டது.

6வது படிக்கையில் ஹாஸ்டலில் அவனுக்கு கிடைத்த பரிசை எனக்கு மாற்றி கொடுத்தது.
அவன் NCC 'ல் இருந்தவன். நாங்கள் படிக்கையில் இரண்டு மணி நேரம் அந்த NCC  பயிற்சியை முடித்தால் ஒரு டிபன் தருவார்கள். அந்த பயிற்சி முடிந்தவுடன் அந்த களைப்பையும் பார்க்காது அந்த உணவை எடுத்துக்கொண்டு என்னை தேடி கண்டு பிடித்து என்னோடு சேர்ந்து உண்பான்.
யார் ஒருவருக்கும் எந்த நேரத்திலேயும் தவறாக எதையும் நினைக்க செய்ய மாட்டான்.
மும்பை நகரில் அவன் பணி பு ரிகையில் நான் கோடை விடுமுறைக்கு  அங்கே சென்று இருந்தேன். அப்போது ஒரு நாள்  நான் வழி தவறி வர சிற மணிநேரங்கள் தாமதித்தால் அங்கே ரயில்வே நிலையத்திலேயே 6 மணி நேரம் அமர்ந்து என்னை பார்த்தவுடன் செல்லமாக கடிந்து கொண்டவன்..என்று பல நினைவுகள்...

இரண்டு வாரம் கழித்து

ஹலோ ஹரி..

சொல்லுங்க விசு

பட்டிமன்றம் எப்படி போச்சி?

அதை விடுங்க, அண்ணன் எப்படி உள்ளார்?

அண்ணன் தவறி விட்டார் ஹரி..

எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் விசு. தைரியமாக இருங்கள்.

சரி பட்டிமன்றம் எப்படி போச்சு? பேராசிரியர் என்ன தீர்ப்பு கூறினார்.

நிறைவான மகிழ்ச்சிக்கு காரணம் "உறவே" என்று கூறினார்.

சரி ஹரி... பிறகு சந்திப்போம்

"உறவே"..

என் வாழும் காலம் இன்னும் எவ்வளவு நாட்கள் என்று தெரியாது ஆனால் நிறைய பணம் சம்பாதிக்க வாய்புகள் உண்டு. ஆனால் என்னை விட்டு போன என் அண்ணன் என்னும் உறவு? மீண்டும் கிடைக்குமா?
அருமை நண்பர்களே... "மீண்டும் சொல்கிறேன்'...
நிறைவான மகிழ்ச்சிக்கு காரணம் உறவே..உறவே... உறவே...

செவ்வாய், 24 ஜூன், 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

தோழி மைதிலி கேட்க நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பதிலை படித்து உற்சாகப்பட்டு நான் எழுதிய என் பதில்கள்.

1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
அந்த பாட்டி பார்த்தாயா? எப்படி கம்பீரமா அந்த தாத்தவை வைச்சி இருக்குனு வரவங்க எல்லாம் சொல்லனும்.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
அப்படி எதுவும் இல்லை. கற்று கொண்ட சில காரியங்களை மறக்க விரும்புகிறேன்.

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
'அண்ணே, நான் மட்டும் உங்களை பற்றி தவறாக பேசினேன் என்பதை உண்மை என்று நம்பினால், கீழ காஞ்சி போய் இருக்கும் அந்த அசிங்கத்தை மென்னு என் முகத்தில் காரி துப்புங்கள்'  என்று ஒருவர் அடுத்தவரிடம் கேட்டதை கேட்டு...சென்ற வாரம்!

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
மெழுகுவர்த்தி கொளுத்தி  TV பார்ப்பேன், இல்லை இல்லை புத்தகம் படிப்பேன்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
இரண்டும் பெண் பிள்ளைகள் அல்லவா... உன் தாயை பார். அவர்கள் வழியை பின்பற்று.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால்
எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

இந்தியாவின் தனி மனித ஒழுக்கத்தை.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என் 10 வயது மகளிடம். ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளதை உள்ளது என்று அன்போடு எடுத்து சொல்லுபவள்.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
அட பாவிகளா, அது பழைய செய்தி, இப்ப நடந்த காரியத்த கேள்வி பட்டீர்கள் என்றால் இன்னும் சுவராசியமாக இருக்கும். அதுமட்டும் இல்ல, இந்த செய்தி பொய்யான செய்தி. உண்மைய கேள்வி பட்டீர்கள் என்றால் என்னையும் வெட்டி விட்டு நீங்களும் நாக்கை புடுங்கி கொண்டு மண்டையை போட்டு இருப்பீர்கள்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
சோகமான கடந்த காலத்தால் நல்ல எதிர் காலத்தை இழந்து விடாதே. பிள்ளைகளுக்காய் வாழ்ந்து காட்டு.

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
100வது பிறந்த நாளாய் எப்படி கொண்டாடலாம் என்று யோசிப்பேன் (மீண்டும் முதல் கேள்விக்கு போகவும்)

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...