திங்கள், 7 ஏப்ரல், 2014

துண்டை காணோம் துணியை காணோம்.


உலக கோப்பை   போட்டி பார்த்தாயா? எப்படி இருந்தது நண்பர் ஒருவர் கேட்டார். என்னாது? உலக போட்டியா அது 2016 ல் தானே என்று சொன்னதற்கு நான் கிரிக்கெட் சொன்னேன் என்றார். மன்னிக்கவேண்டும் எனக்கும் கிரிகெட்டுக்கும் ரொம்ப தூரம் என்று சொன்னேன்.
அடபாவி, யாரிடம் பொய் சொல்லுகிறாய்? ஒருமுறை ஷார்ஜாவில் கிரிகெட் போட்டி நடை பெரும் போது பல்கலைகழக தேர்வில் இருந்து பாதியில் எழுந்து போனாயே? நீ கிரிக்கெட்டின் தீவிர ரசிகன் என்று எனக்கு தெரியும் என்றான்.

அவன் சொன்னதும் சரிதான். 1992 வரை என்னை விட ஒருவனும் கிரிகெட்டை அதிகமாக ரசித்து இருக்க முடியாது. கிரிகெட் என்றவுடன் நான் ஒரு இந்திய கிரிகெட் ரசிகன் என்று எண்ணவேண்டாம். நான் ஒரு கிரிகெட் ஆட்ட ரசிகன். இந்திய கிரிகெட்டை என்னால் அவ்வளவு எளிதாக ரசிக்க முடியாது.ஏன் என்று பிறகு சொல்கிறேன்    இரவு முழுவதும் விளித்து வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா ஆட்டத்தை ரேடியோவில் ரசித்தவன் நான். எந்த ஒரு இன்டர்நேஷனல் ஆட்டம் நடக்காத போதும், மகாராஷ்டிர - கர்நாடக ஆட்டத்தை ரேடியோவில் கேட்டு ரசிப்பேன். இந்த ஆட்டத்தின் மேல் அவ்வளவு ஒரு வெறி. எங்கள் கல்லூரியில் நடந்த வினாடி வினாவில் கிரிகெட் சம்மந்தமான எந்த கேள்வியும் எனக்கு தான் வரும். 1991 வரை கிரிகெட் விளையாட்டின் புள்ளிவிவரங்கள் அத்துபடி. சரி கேள்விக்கு வருவோம். இவ்வளவு வெறியனான எனக்கு இந்த உலக கோப்பை நடந்ததே தெரியாதா?  ஏன்.

1990 என்று நினைக்கிறன். பாகிஸ்தான் அணி சவுத் ஆப்பிரிகா சென்று இருந்தது. அந்த தொடரில் ஒவ்வொரு ஆட்டதிலேயும் பாகிஸ்தான் அணி "கஷ்டப்பட்டு" தோற்றது. பாகிஸ்தான் அணியின் கப்டன் ஆகிய சலீம் மாலிக் மீண்டும் மீண்டும் வேண்டும் என்றே அவுட் ஆகி செல்வார். இந்த நாட்களில் "மேட்ச் பிக்ஸிங்" பற்றி யாரும் கேள்வி பட்டது இல்லை, அதனால் யாருக்கும் சந்தேகம் வர வில்லை. ஆனால் நான் தான் கிரிகெட் வெறியன் ஆயிற்றே.இந்த தொடரின் போது சில கூட பார்க்கும் சில நண்பர்களிடம் கூறினேன் 'சம்திங் இஸ் வ்ராங்" என்னை பொறுத்த வரை சலீம் மாலிக் போல் ஒரு நாள் 50 ஓவர் போட்டியை ஆடுபவர்கள் சிலரே.இவர் எப்படி இப்படி அவுட் ஆகின்றார் என்பதே. இதை தொடர்ந்து சில வருடங்கள் கிரிகெட் போட்டிகளின் ஆட்டமே சரியில்லை. குறிப்பாக பாகிஸ்தானும் இந்தியாவும்.

 இருந்தாலும் எனக்குள் இருந்த வெறியினால் தொடர்ந்து பார்த்து கொண்டு  வந்தேன். பிறகு ஷார்ஜா போட்டியில் இந்த இரண்டு நாடுகளும் "அசார்-அக்ரம்-ஆசிப் இக்பால்" தலைமையில் செய்த அட்டூழியங்களை பார்த்தவுடன் என் நேரத்தை வீணடிப்பதை மெதுவாக குறைத்து கொண்டேன். இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்களை தவிர்த்து விட்டு ஆஸ்திரேலியா - சவுத் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் போட்டிகளை பார்த்து கொண்டு இருந்த எனக்கு ஹான்சி குரோனி சூதாட்டத்தில் சிக்கியது அதிர்ச்சியை தந்தது.  ஹான்சி குரோனி ஒரு சிறந்த விளையாட்டாளர். அது மட்டும் அல்லாமல் என்னை பொறுத்தவரை ஒரு நல்ல மனிதர். எப்படியோ இந்த வலையில் சிற்றின்பதிர்க்காக வீழ்ந்து விட்டார். அதை வைத்து அவரை இந்த சூதாட்ட மாபியா மிரட்டி ஆட்டி படைத்தது என்று தான் நான் சொல்லுவேன்.

ஹான்சி குரோனி சிக்கியது என் கிரிகெட் வெறிக்கான மரண அடி. சுத்தமாக பார்ப்பதை நிறுத்தி  விட்டேன். அதன் பின் ஹான்சியின் அகால மரணம் இன்னும் ஒரு புரியாத புதிர் ஆகியது. சில வருடங்கள் கழிந்தது. வெஸ்ட் இண்டீஸ் உலக கோப்பை போட்டி நடத்தியது.அந்த வேளையில் பாகிஸ்தான் அணியின் கோச் பாப் வோல்மர் மர்மமான முறையில் இறந்தார். அவரின் இறப்பை ஒரு பொருட்டாகவே கருதாமல் ICC     நடந்து கொண்டது.  அது என்னை கிரிகெட்டை வெறுக்க வைத்தது.

 கிரிகெட் என்ற அத்தியாத்தை என் வாழ்வில் இருந்து முற்றிலும் அகற்றி விட்டு வாழ்ந்து வரும் நாட்களில் நண்பன் ஒருவன் கூறினான், IPL என்று இந்தியாவில் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு அணியை வைத்து நடக்கபோகிறது என்று.  அடேடே, இது நல்ல இருக்கே என்றேன். இனிமேல் தினந்தோறும் தீபாவளி தான் என்றேன். பணக்காரன் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதற்கும், ஏழை வெள்ளை பணத்தை கருப்பு ஆக்குவதற்கும் மிகவும் வசதி  என்றேன். அப்படியே ஆகி விட்டது.  எந்த புற்றில் எந்த பாம்பு என்று தெரியவில்லை. எவன் எவனிடம் கொடுத்தான் - வாங்கினான் தெரிய வில்லை, எல்லாம் ஒரே மாயம்.  சில நாட்களுக்கு பாகிஸ்தான் அணியின் கப்டன் மற்றும் இரண்டு பந்து வீச்சாளர்கள் சிறையில் அடைக்கபட்டார்கள்.  அதன் பின் ஸ்ரீசாந்த் என்ற பந்து வீச்சாளர் காசு வாங்கி மாட்டி கொண்டார் என்று கேள்வி பட்டேன். இவர் வாங்கிய விதம் மிகவும் அற்புதம்.

அந்த காலத்தில் கிராம மக்கள் மத்தியில் மாடு-மற்றும் மற்ற கால்நடைகள் விற்க-வாங்கையில் ஒரு பழக்கம் இருந்தது. ஒரு துண்டை எடுத்து கொண்டு விற்பவரும் வாங்குபவரும் அதன் உள்ளே கையை விட்டு ஒருவருக்கொருவர்  விரல் விட்டு எண்ணி மற்ற யாருக்கும் தெரியாமல் விலையை நிர்ணயிப்பார்கள். இந்த வியாபாரத்தில் நாணயம் இருந்தது. ஒருவர் வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவார். இதை எல்லாம் ஒரு சிறு துண்டின் மறைவில் செய்தார்கள். அனால் ஸ்ரீசாந்த் அதே துண்டில் தன்  சூதாட்டத்தை காட்டினாராம். அந்த துண்டு இடுப்பில் இருந்தால் ஒருவிலை. முன்னே இருந்தால் மற்றொருவிலை என்று பேசி பார்க்கும் அனைவருடைய மனதை  துண்டு துண்டாகி கோடி கணக்கான மக்களை துண்டை காணோம் துணியை காணோம் என்று திண்டாட செய்தாரம்.


அது சரி.இவ்வளவு அநியாயம் நட்டகின்றதே இதை யாரும் தட்டி கேட்பார் இல்லையா? நல்ல கேள்வி. பிசிசிஐ ன் தலைமை தான் தட்டி கேட்க்க வேண்டும், ஆனால் பொய்யப்பன் - மெய்யப்பன் என்று பலரும் மொய்த்து கொண்டதால் ஒன்றும் செய்ய இயலவில்லை. CSK அணியின் உரிமையாளர் தான் பிசிசிஐ தலைவராம். அவரின் மருமகன் தன் அணி கண்டிப்பாக தோற்கும் என்று பந்தயம் கடுவாராம். இது எப்படி உள்ளது தெரியுமா? என் மகன் கண்டிப்பாகா இந்த வருடம் தேர்வில் தேர்ச்சி பெற மாட்டான் என்று ஒரு தகப்பன் பந்தயம் கட்டுவது போல் உள்ளது. இந்த பொய்யப்பன்  CSK அணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நாட்டின் கப்டன் டோனி சொல்லுவாராம். இதற்க்கு எல்லாம் நம் போல கேனைகள் தலை ஆட்ட வேண்டுமாம்.

நல்ல வேலை, நான் தப்பித்தேன், 1991ல் இருந்து நேற்று வரை இந்த கண்றாவியை தவிர்த்ததால் எவ்வளவு நேரம் மிச்சம். நன்றி.   

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. சூது கவ்வும் சரி, அது வரை துட்டு, காசு, பணம் ... Money... Money..

      நீக்கு
  2. நானும் பைத்தியமாகி... இப்போது விடுதலையாகி பல வருடங்கள் ஆகி விட்டன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. If I get tricked by someone once, shame on them. If I get tricked by someone everyday, shame on me! Thank you for agreeing with me on this Dhanabalan.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...